2088-ல் நான் நாள்:28-4-2088 நேரம் :நள்ளிரவு 12.00 எனது பேரனிடம் கூறிய கடைசி வார்த்தைகள்….

0 541

ஆமாம் அது ஒரு கனவுக்காலம்…..

அப்போது காடு என்ற ஒன்றும் அதில் மரங்கள்,மலைகள்,ஆறுகள் அமைந்த இயற்கை அன்னையை மனிதர்களிடம் இருந்து பாதுகாக்க விலங்குகள்,பறவைகள்,புழு,பூச்சிகள் என்ற இனமும் இருந்தது…

நான் மூச்சு காற்றை எந்த கருவியிலும் சுவாசிக்கவில்லை…..
இப்போது மனிதர்கள் செல்ல தடைசெய்யப்பட்ட காவிரி வைகை முல்லை மற்றும் பல ஆறுகளை பார்த்த கடைசி தலைமுறையில் வாழ்ந்தவன் நான்..

இந்தியாக்கு பரம எதிரி நாடான தமிழ்நாடு ஒருகாலத்தில் இந்தியாவின் மாநிலமாக இருந்தது…..

அரசியல் கட்சிகளும் அவர்கள் நடத்தும் நாடகங்களும் அரங்கேறி மெல்ல இயற்கை அன்னையை போட்டி போட்டு குறு போட்டு இப்போது மனித இனத்தில் பயன்பாட்டியில் இல்லாத பணம் என்ற காகிதக்குப்பைக்கு விற்ற கலிகாலம் தொடங்கப்பட்ட தலைமுறையில் வாழ்ந்தவன் நான்….

மனித இனத்தில் அழிவின் விளிம்பின் இருக்கும் மற்றோரு பாலினம் ஆனா பெண்கள் ஆண்களை மனம் முடித்து இல்லற வாழ்க்கையில் சில்லறையை கூட வைத்து இல்லறவாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த கடைசி தலைமுறையில் வாழ்ந்தவன் நான்….

இப்போது மதிகெட்ட அரக்கர்கள் பெண்களை கற்பழித்து கொல்ல பயன்படுத்தும் இடம் தான் அன்றைய மனிதர்களின் ஆலயங்கள்.அந்த கால கட்டத்தில் அவர்களின் ஆதி கலையான பறையிசை கூட இசைக்க அனுமதிக்காத புனிதம் என்று நம்பப்பட்ட இடம்…….

நீர்க்காக தொடங்கப்பட்ட மூன்றாவது உலக போர் தொடங்கி 48 மணி நேரம் தான் ஆகிறது அதற்குள் இந்த உலகம் அழிய போகிறது.இவர்கள் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்ததுதான் இவர்களின் சாதனை ..

ஓடி ஆடி விளையாட கூட இடம் இல்லாத கந்தக பூமியாக்கி உன்னை போல பலருக்கு செய்த தோர்கம் தான் இவர்களின் வெற்றி நானும் ஒரு வகையில் உனக்கு தோர்கி தான்….

சற்று நேரத்தில் இறக்க போகிறோம் கடைசியாக ஒரு முறை என்னை தமிழில் தாத்தா என்று அழை …..

ஆக்கம் (பா.பத்மநாபன்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.