2050 யில் கடலில் வாழும் உயிரணிங்களை விட நெகிழி அதிகமாக இருக்கும் என்று வெளிப்படையாக கூறுகிறது.

0 408

மாற்றி யோசியுங்கள் ! காய்கறி கழிவுகளை மாட்டிற்கு உணவாக்குங்கள்
சென்னை மேடவாக்கம்

இவ்வுலகம் மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல இது இங்கு வாழும் பல கோடி உயிரினங்களுக்கும் சொந்தமானது.

படித்து பல பட்டங்கள் வாங்கிய ஆறறிவு மனிதன் தனது அறிவினால் தன்னையும் சீரழித்து தன் சுற்றுப்புறத்தையும் நாரடித்து சுற்றி வாழும் உயிரினங்களையும் தனது இயற்கை சாராத அறிவியலால் அழிக்கிறான்‌ !
இது படித்த அறிவாளிகளான நம் அனைவருக்கும் பொருந்தும்.

நெகிழி(Plastic) 110 ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவில் கண்டுபிடிக்கவே பட்டது. இங்கு நம் சமூகத்தில் சுமார் 30 ஆண்டுகளாகத் தான் புழக்கத்தில் உள்ளது.

மனிதர்களாகிய நாம் வெரும் 100 ஆண்டு பயன்பாட்டில், மக்க பழ நூறு வருடங்களாகும் நெகிழியை உலகின் அனைத்து மூலைகளிலும் நிரப்பி விட்டோம். ஓர் ஆய்வு 2050 யில் கடலில் வாழும் உயிரணிங்களை விட நெகிழி அதிகமாக இருக்கும் என்று வெளிப்படையாக கூறுகிறது.

இவை யாவும் மாற்ற முடியாததா என்ன?
கண்டிப்பாக இல்லை !
நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் முடியும்.

முதலில் இதற்கு எல்லாம் என்ன காரணம் என்று பார்த்தால் ?

முதலில் நமது சோம்பேறித்தனமும் அடுத்து பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கில் மட்டுமே வியாபாரம் செய்யும் வணிகர்களின் வலைப்பின்னலில் சிக்கி தற்சார்பை இழந்து வாழ்வதே தான் இதற்கு முழு காரணம்.

அனைவரும் வீட்டில் உணவு கழிவுகளையும் நெகிழி காகிதங்களை தனியாக சேகரித்தாலே போதும்.

சென்னை போன்ற நகரங்களில் இருக்கும் மக்கள் உணவு மற்றும் காய்கறி கழிவுகளுடன் சேர்த்து நெகிழியையும் குப்பைத் தொட்டியில் போடுவதால் பல மாடுகள் நாய்கள் உணவுடன் சேர்த்து நெகிழியையும் சாப்பிட்டு இறந்து விடுகிறது :'(

இந்த மாதிரி தருணங்களில் நாம் காய்கறி கழிவுகளை தனியாக எடுத்து வீட்டிற்கு வெளியில் நீருடன் வைத்தால் சாலையில் வாழும் மாடுகள் நன்றாக சாப்பிட்டு விட்டு செல்லும் 🙂

உணவு கழிவுகளை கொஞ்சம் மண் தோண்டி புதைத்தாள் போதும் உரமாகும் 🙂 மக்காத குப்பைகளை சேகரித்து எடைக்கு போட்டு விடுங்கள். முடிந்த வரை யோசித்து நெகிழி பயன்பாட்டைக் குறையுங்கள் !

இவை அனைத்தையும் செய்ய சோம்பேறி தனத்தைத் தவிர்த்து தினமும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கினால் போதும் 🙂

மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும் !

#மகிழ்வித்துமகிழ்
#தற்சார்பு
#நெகிழிதவிர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.