20 வயதை அடையும் போது பலரும் உங்களிடம் இதனை கூறியிருப்பார்கள் ஆனால் அவை உண்மையில்லை..!

0 561

கேள்வி: 20 வயதை எட்டும் போது வாழ்க்கையில் நான் அறிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் யாவை?

நிறைய உள்ளது ஆனால் சிலவற்றை சொல்கிறேன் வாழ்க்கைக்கு தேவையானது மட்டுமே முதலில் பார்க்கவேண்டும்..!

உனக்கு இருபது வயதாகிவிட்டது இன்னும் இரண்டு வருடத்தில் கல்லூரி படிப்பை முடித்துவிடுவாய் இப்போதே என்ன பண்ணவேண்டும் என்ன படிக்கவேண்டும் என்ன வேலைக்கு செல்லவேண்டும் என்பதை மனதில் கொள்.ஏன் என்றால் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது இங்கு திறமைசாலிக்கு மட்டுமே இடம் உண்டு யார் முதலில் வருகிறோம் என்று ஓட்டம் அதில் உன்னை கீழ தள்ள பார்ப்பார்கள் எவனையும் நம்பாதே உன் உழைப்பை தவிர

இது வாலிப வயது மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும் அதை கட்டுப்படுத்துவதும் அலைபாய விடுவதும் உன் கையில் தான் உள்ளது என்பதை தெரிந்துகொள் சேர்க்கை சேரில்லை என்பார்கள் பன்றி கூட்டத்தில் சிங்கமாக இருக்கவும் முடியும் பன்றியாக மாறவும் முடியும் என்பதை உணர்

நீ ஓடவேண்டும் ஓடி கொண்டே இருக்கவேண்டும் உன் வாழ்க்கை முழுவதும் அதற்கான செயல்களில் இறங்கு

பலர் வந்து உன்னிடம் பணம் முக்கியம் இல்லைஎன்பார்கள் நீ பின் நாளில் எடுத்து போக போறது பணம் இல்லை என்பார்கள் அவர்களிடம் உதவி தேவைப்படும் போது பணம் கேட்டு பார் இருக்கமாட்டார்கள்

உன் எதிர்காலம் உன் கையில் தோழா நீ வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதை மனதில் கொள் தோல்வி வரும் வீழ்ந்துவிடாதே ஓடி கொண்டே இரு கண்டிப்பாக ஜெயிப்பாய் விடாமுயற்சி செய்து கொண்டே இரு

சேமிக்க ஆரமித்து விடு உன் பெற்றோர் பெயரில் பகுதி நேர வேலையே தேடு பணம் சேமிக்க ஆரமித்து அதை அந்த கணக்கில் செலுத்தி விடு நிறைய கற்றுக்கொள் வாழ்க்கைக்கு தேவையானவை நிறைய உள்ளது

வீட்டை விட்டு வெளியே வா கற்றுக்கொள் உலகத்தை கற்றுக்கொள் மக்களை இந்த உலகத்தில் உனக்கு உதவி நீ தான் ஓட்டம் எடுத்து கொண்டே இரு பின்னாளில் நன்றாக இருப்பாய்

உன் நண்பர்கள் மது மாது என்று கூறுவார்கள் அவை எல்லாம் பொய் மாயை நம்பிவிடாதே மது மாது என்று எதற்கும் போகாமல் எப்படி உயரவேண்டும் என்பதை நினை ஜெயித்து விடுவாய் .

பதில்: நவின் நிசான்ந்

You might also like

Leave A Reply

Your email address will not be published.