1999ஆம் ஆண்டு டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகமானது இந்த மாட்டினத்தை

0 250

நாட்டு மாடு என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய ஒரு மாட்டினம் அல்லது கிளையினம் ஆகும். நாட்டுமாடுகள் முதுகில் திமிலுடனும், கழுத்தில் தொங்கும் தசையான அலைதாடியுடனும், சிலசமயம் தொங்கிய காதுகளுடனும் இருக்கும்.

நாட்டு மாடுகளும் அதன் கலப்பின மாடுகள் மிகுந்த வெப்பநிலையை தாங்கக்கூடியதாக உள்ளதால், வெப்பமண்டல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. தூய நாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் போன்றவை இழுவை விலங்கு, வண்டி மாடுகள் போன்ற பணி விலங்காகவும், பால் மாடுகளாகவும், இறைச்சித் தேவைக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

இவற்றின் சாணமானது எரிபொருளாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டுமாடுகளில் சிற்றுரு (மினியேச்சர்) மாடுகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.

1999ஆம் ஆண்டு டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகமானது இந்த மாட்டினத்தை படியெடுப்பு முறையில் உருவாக்கியது
இடம் : மேலக்கால்

புகைப்படம்: vj photography

அனைவருக்கும் பகிருங்கள் இந்த அழகிய புகைப்பட தொகுப்பை ரசிக்கட்டும்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.