10,12 வகுப்பில் முதலிடம் பெற்று நீயூஸ் பேப்பர்ல படம் வந்தவங்களை மறுபடி நீங்க என்னைக்காவது எங்காவது பார்த்து இருக்கிங்களா??

0 455

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் முதலிடம் பெற்று நீயூஸ் பேப்பர்ல படம் வந்தவங்களை மறுபடி நீங்க என்னைக்காவது எங்காவது பார்த்து இருக்கிங்களா??

கண்டிப்பா பார்த்து இருக்க முடியாது…

இந்த பர்ஸ்ட் பெஞ்ச் கேஸ் எல்லாம் உருட்டி பெரட்டி ஒரு மெடிக்கல், இஞ்சினியரிங் முடித்து ஒரே ஒரு கார் , ஒரே ஒரு வீடு, ஒரே ஒரு பொண்டாட்டி, ஒன்றிரண்டு குழந்தைகள்னு செட்டில் ஆகிடுவாங்க.

வாழ்க்கையில் சாதித்தவங்க வரிசையில் நிற்பவங்க எல்லாம் ரொம்ப நடுத்தரமும் லாஸ்ட் பெஞ்சும்…

அடி வாங்கி அடி வாங்கி, அசால்ட்டா எழுந்து நிப்பதும், வெற்றி பெறுவதும் நம்ம மிடில் கடைசி பெஞ்சும், மிடில் கிலாசும்தான் ….

100க்கு 99 வாங்குனா அழும் முதல் பெஞ்ச் மாணவன் … சின்ன அடி வாங்கினதும் மூலைல முடங்கிக்குவான்..

ஐந்துலயும் அரியர்ஸ்டா.. லாஸ்ட் பெஞ்ச்டா.. எருமை மேய்க்கத்தான் லாய்க்கு என்ற பெயர் பெற்றவர்கள்தான் சொந்த தொழில் ஆரம்பித்து ஐம்பது, நூறு, ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் வெற்றியாளராக சாதனையாளராக இருப்பர்.

அப்துல்கலாம்..
காமராஜர்,
எம்.ஜி.ஆர்,
டெண்டுல்கர்,
வைரமுத்து,
பில் கேட்ஸ்
இளையராஜா தொடங்கி ஒலிம்பிக்ல தங்கம் வாங்கின நம்மூர் மாரியப்பன் வரை ஏழ்மை, கஷ்டம், சாதாரண பள்ளி, சாதாரண வளர்ப்புகளில் வந்தவர்கள்தான் அதிக பட்ச சாதனைகள் படைத்திருக்கிறார்கள்.

சில்வர் ஸ்பூன் கேசுங்க எல்லாம் பெரும்பாலும் அப்பா சேர்த்து வைத்ததை கரைத்து கொண்டோ அல்லது பாதுகாத்து கொண்டோ இருப்பார்கள்..

அதுனால நான் சொல்ல வரது என்னனா, பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். இது மிக கட்டாயம். அத்தியாவசியம்.

ஆனால் உங்க வரவுக்கு மிஞ்சின ஸ்கூல்ல படிச்சாதான் பசங்க முன்னுக்கு வருவாங்க என்று நினைப்பதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை.

நல்ல பள்ளிகள் பிள்ளைகள் திறமையை ஊக்குவிக்கின்றன என்பது கொஞ்சம் உண்மையே..
ஆனால் ஒரு திறமையுள்ள குழ்ந்தை எந்த பள்ளியில் விட்டாலும் நல்லா படிக்கும் என்பது நிறைய நிறைய உண்மை…

அதனால் தன் சக்திக்கு மிஞ்சி, கடன் பட்டு பெரிய பெரிய பள்ளிகளில் சேர்ப்பதை விட, உங்கள் சக்திக்கு எந்த பள்ளியில் சேர்க்க முடியுமோ அதில் சேருங்கள்.

பக்கத்து வீட்டு குழந்தை அங்கதான் படிக்குது, எதிர்த்த வீட்டு குழ்ந்தை இங்க படிக்குது.. அண்ணா பையன் தங்கச்சி பொண்ணு இங்க படிக்குறானு சேர்க்காமல், அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ கடன் படாமல் படிக்க வையுங்கள்.

குழந்தைகளுக்குள் இருக்கும் திறமையை ஊக்குவிக்கத்தான் படிப்பு. ஆனால் அப்படிப்பட்ட கல்வி திட்டம் நம்மிடம் இல்லை …

எழுத்தை விழுங்கி, வெள்ளைத்தாளில் வாந்தி எடுக்க சொல்லித்தரும் வேலையைத்தான் எல்லா பள்ளியும் செய்யுது..
அதை எந்த பள்ளி செய்தால் என்ன???

இதை படிக்கும் போது கடைசி பெஞ்ச் மாணவர்கள் சிரித்தபடி கடந்து செல்வார்கள் ஆனால் கல்வியறிவு கொண்டவர்கள் மௌனமாக கடப்பார்கள் என்பது நிதர்சனம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.