ஹார்லிக்ஸ் பூஸ்ட்ட ஓரம்கட்டு இனி இத பயன்படுத்துங்க..!

0 476

தமிழகத்தின் அரசு மரமான பனை மரங்கள் அழிந்து வரும் அவலநிலை..

எனது சிறு ஆய்விற்காக தமிழகத்தில் 2500 கிலோ மீட்டர் பயன் செய்தேன்.அங்கு எங்கு பார்த்தாலும் பனை மரம் அழிந்து வரும் நிலையை பார்த்தேன். அவற்றினை வைத்து இதனை எழுதினேன்.

வானுயர விண்ணை முட்டி நிற்க்கும் பணை மரம். வறட்சிக்கு சவால் விடும் மரம், தமிழகத்தின் அரசு மரம், பூலோக்கற்பக விருட்சகம் என்று பலவிதமான முகங்களை கொண்டது பனைமரம்.

தென்னையை வைத்தால் பலன் கண்டு செல்வார்கள்,

பனையை நட்டால் பார்த்துவிட்டுச்செல்வார்கள்

என்பது பழமொழி.

அதை உண்மையாக்கும் வகையில் தென்னையை நட்டால் சில ஆண்டுகளில் பலன் கிடைத்துவிடும். ஆனால் பனையை நட்டவர்கள் சிலருக்கு அவர்கள் ஆயுள் முடியும் வரை பலன் கிடைப்பதில்லை என்பதன் சுருக்கம் தான் இது. பனைமரம் தென்னைமரத்தை போல் அல்லாமல் 50 முதல் 100 ஆண்டுகள் வரை பயன் தரக்கூடிய மரம் ஆகும். ஒரு காலத்தில் தமிழகத்தில் 4 கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் இருந்தது என தகவல். ஆனால் தற்ப்போது அந்த நிலை மாறி 1 கோடிக்கும் குறைவான மரங்களே கானப்படுகின்றன என்கிறார்கள் சில சமுக ஆர்வாலர்கள். 

பனை மரத்தை வெட்டினால் கேட்பார் இல்லாததால் அவை செங்கள் சூளைகளுக்கு விறகாக பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பனைமரம் ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து போனதாலும் பனை மரங்கள் பற்றி கண்டு கொள்ள ஆள் இல்லாமல் போய்விட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனியார் நிலங்கள், மற்றும் அரசு நிலங்களில் அதிகமாப பனைமரங்கள் காணபட்டன ஆனல் இந்த ஆண்டு அவை வெகுவாக குறைந்து காணப்படுகின்றது என்கிறார்கள். இதன் விளைவு பனைமரங்கள் 1 ஆண்டில் கோடை காலமான 2 மாதங்களுக்கு மட்டுமே பயன் தரக்கூடியது ஆகும்.

அப்படி 2 மாதங்கள் பயன் தரும் இவைகளை மரம் ஏறும் தொழிலாளர்கள் கோடை காலத்தில் பனைமரத்தில் காய்க்கும் நுங்கினை வெட்டி நகர் பகுதிகள் மற்றும் இதர சாலை ஓரங்களில் உள்ள மரத்தடையில் அமர்து வழிப்போக்கர்களிடம் விற்ப்பனை செய்து அதன் மூலம் வரும் வருவாயை வைத்து குடும்பம் நடத்துவர்கள். ஆனால் தற்ப்போது சாலையோரங்களில் சிலர் மட்டுமே அமர்ந்திருக்கும் காட்சியை நம்மால் காணமுடியும் மேலும் இந்த ஆண்டு மழை இல்லை மற்றும் முக்கியமாக பனை மரங்களை சிலரது சுய லாபத்துக்காக செங்கள் சூளைகளுக்கு வெட்டி எடுத்து சென்று விடுகின்றனர்.

இதனால் தங்களுடன் பனைமரம் ஏறிவந்தவர்கள் பலர் இத்தொழிலை விட்டு விட்டு 100 நாள் வேலை மற்றும் இதர கூலி வேலைக்கு செல்கின்றனர் சிலர் மட்டுமே இதை செய்துவருவதாகவும் கூறுகின்றனர். மேலும் தற்ப்போது மரங்கள் குறைவு நுங்கு இல்லை போற காரணத்தால் தங்களுக்கு மரம் ஏறி நுங்கு வேட்டி எடுத்துவந்து விற்க்க கூலிகூட கிடைப்பது இல்லை என்கின்றனர்.

இதனால் விலையை சற்றே உயர்த்தினால் விலை அதிகம் என்று பொது மக்கள் வாங்க மறுக்கின்றனர் என்றும் கூறினர். இதனால் தங்களின் வழ்வாதரத்தை காக்கும் வகையில் இனிவரும் காலங்களில் பனைமரங்களை காக்கும் நடவடிக்கை தமிழக அரசு மேற்க்கொள்ளவேண்டும் என்கின்றனர்.

மேலும் பள்ளி கோடை விடுமுறை நாட்களில் தங்களின் விடுமுறை நாட்களை களிக்க தங்கள் கிராம பகுதிகளில் உள்ள பொது நிலங்களான கல்வாய் பகுதிகள், மேட்டு நிலங்களில் வளர்ந்து நிற்க்கும் பனை மரங்களில் ஏறி அதில் இருக்கும் நுங்கினை வெட்டி உண்டு மகிழ்வார்கள்.

மேலும் கோடை காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கினை உண்பது அளவுகடந்த மகிழ்ச்சி சிறுவர்களுக்கு ஆனால் அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டு இல்லை என்கின்றனர். காரணம் தனியார் நிலங்களில் இருக்கும் மரத்தில் நுங்கினை வெட்டினால் மரத்தின் உரிமையாளர்கள் திட்டுவார்கள் என்பதால். பொது இடங்களில் இருக்கும் மரத்தில் தாங்கள் நுங்கு வெட்டுவதாகவும் ஆனால் இந்த ஆண்டு செங்கள் சூளைகளுக்கு என பொது இடங்களில் உள்ள மரத்தினை வெட்டி செல்கின்றனர்.

பனை மரம் பல நன்மைகலை கொண்டது. இதன் தண்டு பகுதி விடு மற்றும் குடில் அமைப்பதர்க்கு தராய்யாகவும், இதன் பனை ஓலையில் வீடு கட்டினால் குளிர்ச்சியாக இருக்கும், பனை ஓலை விசிறி, பதனீர் இரக்க, பனை வெல்லம் செய்ய, கோலை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் நுங்குகாய், இதன் தண்ணீர் வியவை குறுக்களை குணப்படுத்தம் பயன்படும், மேலும் பனைங்காய் பழுத்து பனைபழம் ஆக மாறும் அதனையும் உண்டு மகிழ்வார்கள், இதன் மூலம் கிடைக்கும் விதையை நட்டால் பனைகிழங்கு கிடைக்கும் அதில் நார்ச்சத்து அதிகம் என பனை மரத்தின் ஓவ்வொரு பகுதியும் பயன் படும் வகையில் அமைந்துள்ளது. இப்படிபட்ட மரம் அளிந்து வருவது ஒரு துக்கசெய்தியே என்கின்றனர் பொது மக்கள்.

மேலும் பனை மரங்கள் அதிகம் உள்ள கிராம புற பகுதியை கிராம நிர்வாகத்தினர் ஏலம் விடுவார்கள் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது கண்டுகொள்ள படுவது இல்லை.

இதனாலேய கேட்பதர்க்கு நாதியற்று சில விசமிகளின் கையில் சிக்கி அழிந்து வருகின்றது. இதை பாதுகாத்து பரமரிக்கவேண்டிய அரசே கண்டும் காணால் இருக்கின்றது இன் நிலை நீடித்தால் தமிழக அரசு மரம் தன்னை ஆதரிப்போர் இல்லாமல் அழிந்து விடும். இதர்க்கு தீர்வாக பொது மக்கள் கூறுகையில் ஆண்டுக்கு ஒரு முறை கிராம பகுதிகளில் உள்ள பனை மரங்களை கணக்கெடுக்க வேண்டும். மேலும் செம்மரங்கள், தேக்கு மரங்களை வெட்டினாள் வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது போல் பனை மரங்களை வெட்டுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீதல் உள்ள மரங்களை காக்க முடியும் என்கின்றனர்.

பனைமரம் வளரந்து பயன் தர அதிக நாட்கள் ஆகின்றது என்பதல் இதன் மீது அதிக நாட்டம் காட்டுவது இல்லை. இதுவே தானாக வளர்ந்தல் மட்டுமே உண்டு

You might also like

Leave A Reply

Your email address will not be published.