ஸ்டெர்லைட் மட்டுமே தூத்துக்குடியின் அடையாளமும் இல்லை, என்பது புத்தியுள்ளவனுக்கு புரியும்…..

0 176

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடிட்டாங்க, வேலைவாய்ப்பு போச்சு, தூத்துக்குடியின் பொருளாதாரமே அழிஞ்சு போச்சு ன்னு சினிமா ரேஞ்சுக்கு கதை விட்டுக்கிட்டு இருக்காங்க சில சில்லரைகள்…

ஒரேயொரு தொழிற்சாலை மூடப்பட்டால் ஊரே ஒழிந்து விடுவதற்கு தூத்துக்குடி அகமதாபாத்தும் இல்லை, தமிழ்நாடு ஒன்னும் குஜராத்தும் இல்லை..

தமிழ்நாட்டில் “மனிதவள மேம்பாட்டில் (HDI – Human Development Index) ல் சென்னைக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நகரம் தூத்துக்குடி…

தூத்துக்குடியின் பொருளாதார காரணத்தால், 300 வருடங்களுக்கு முன்பே #போர்சுக்கீசியரும், #டச்சுக்காரர்களும், பிறகு #ஆங்கிலேயர்களும் ஆட்சி செய்த ஊர் தூத்துக்குடி…

150 வருடங்களுக்கு முன்பே #துறைமுகமும், ரயில் நிலையமும் அமைக்கப்பட்ட நகரம் #தூத்துக்குடி…
இந்தியாவின் மூன்றாவது பெரிய துறைமுகமும், சரக்குப் பெட்டிகள் கையாளும் துறைமுகமும் இங்கே தான் இருக்கிறது…

தமிழ்நாட்டின் 90% உப்பு இங்கே தான் உற்பத்தி ஆகிறது… டெக்ஸ்டைல்ஸ், மீன்பிடி தொழில், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் என்று அனைத்து பொருளாதாரத்தையும் கையில் வைத்திருக்கும் நகரம் இது…..

ஆண்களுக்கு ஆறு கல்லூரிகள், பெண்களுக்கு நான்கு கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, மத்திய ஆராய்ச்சிக் கல்லூரிகள், 30 உயர்நிலை – மேல்நிலைப் பள்ளிகள் என்று அனைத்தையும் தூத்துக்குடி வைத்திருக்கிறது….

30 – 40 வருடங்களுக்கு முன்பே,
அகில இந்திய கால்பந்து போட்டி,
அகில இந்திய கைப்பந்து போட்டி,
அகில இந்திய கூடைப்பந்து போட்டி,
அகில இந்திய டென்னிஸ் போட்டி
என்று இந்தியாவின் தலைசிறந்த அணிகளை வரவழைத்து வருடாவருடம் போட்டிகள் நடத்திய ஊர் தூத்துக்குடி …

அத்தனையும் எழுதினால், எழுதிமுடிக்க பல மாதம் ஆகும்…

ஒரேயொரு #ஸ்டெர்லைட் மட்டுமே தூத்துக்குடியின் அடையாளமும் இல்லை, அது மட்டுமே தூத்துக்குடியின் பொருளாதாரமும் இல்லை என்பது புத்தியுள்ளவனுக்கு புரியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.