வேப்பம் பூவ இப்போ மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க..!

1 7,626

சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் ஆதிசக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது.

இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை.

அவ்வகையில் வேப்பம் பூவின் மருத்துவ பயன்களை சிறிது காண்போம்!

வாயுத்தொல்லை,​ ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள்.

5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.

கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும்.

நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க உடல் பித்தம் தீரும்.

காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.

வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.

வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.

You might also like
1 Comment
  1. saravanan says

    Vappam pu saputta malattu thanmai varuma

Leave A Reply

Your email address will not be published.