வேடன், புலி, இடிமின்னலிடையே சிக்கிய கர்பமாக உள்ள மான் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதா..?

0 833

கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..
அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.

இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு. அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது..

அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈயுமா?
மகவும் பிழைக்குமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?

மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?

மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.

அப்போது நடந்த நிகழ்வுகள்…….
மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான். எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது.
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது.

நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..
சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..

நாம் இம் மானிடம் இருந்து கற்றுக்கொள்வோம்..
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.

இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எதில் என் கவனம்?
எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி நம்பிக்கையுடன் இருப்போம்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.