வெள்ளைக்காரன் காலத்து ஓடைகள் அப்படியேதான் இருக்கின்றன.ஆனால் சாலைகள் மட்டும் நான்கு எட்டு என்று….

0 385

ஒவ்வொரு வினாடியும் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படும் காட்சிகளைப் பார்க்கும் போது சங்கடமாயிருக்கிறது.

தென் மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான கண்மாய்களும் ஊருணிகளும் சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.
ஊர்ஊருக்கு சாலைகள் போட்ட அரசு அதேபோல் ஓடைகளை தூர்வாரி ஆறுகளுடன் இணைப்பை உருவாக்கியிருக்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்து ஓடைகள் அப்படியேதான் இருக்கின்றன.தூர்வாரி மராமத்து செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
எப்படி நான்குவழிச்சாலைகள் எட்டு வழிச்சாலைகள் முக்கியமோ அதே போல் நீர்வழிப் பாதைகள் ரொம்ப ரொம்ப முக்கியம்.

அரசியல் வாதிகளே நீங்கள் கங்கையையும் காவிரியையும் இனைப்பதற்கு முன்னால் கண்மாய்களையும் ஓடைகளையும் தூர்வாரி அத்தனை கண்மாய்களையும் நதிகளோடு இனையுங்கள். உபரி நீரையெல்லாம் தேக்கி வைக்க ஏற்பாடு செய்யுங்கள்.நீர்த்தேக்கங்களும் புதிய அனைக்கட்டுக்களும் சாவாசமாகக் கூட கட்டலாம்.

கிராமங்களில் வருடம்தோறும் கண்மாய்கள் மட்டும் நிரம்பி விட்டால் நகரக்குடியேற்றங்கள் குறைந்துவிடும். சென்னையின் ஜனத்தொகை பாதியாக குறைந்துவிடும். சென்னையில் வசிப்பவர்கள் யாரும் விரும்பி வசிக்கவில்லை. வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு வேறு வழியின்றி வசிக்கிறர்கள். இதுதான் உண்மை.

எழுத்தாளர் சோ தர்மன் அவர்களது பதிவிலிருந்து..

You might also like

Leave A Reply

Your email address will not be published.