வெறும் உடம்பு தானே இதற்கு ஏன் வெட்கப் பட வேண்டும்.! புரிதலும் புதுமையும் நிறைந்தது பகிருங்கள்..!

0 562

கோவையைச் சேர்ந்த பெண் நர்மதா மூர்த்தி. முகநூலில்
அவர் , தனது பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவு, அதன் முக்கியத்துவம் கருதி சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, இப்பதிவு பதியப்பட்ட 16 மணி நேரங்களுக்குள்ளாகவே, 1,000-க்கும் மேற்பட்ட நபர்களால் பகிரப்பட்டுள்ளது.

இளம்பெண்களுக்கு எதிரான பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், தனது தாயார் தொலைபேசி வாயிலாக தன்னிடம் பேசியதை நர்மதா மூர்த்தி, உரையாடல் வடிவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்த மோசமான நிகழ்வு தொடர்பான செய்தி வெளியானபோது, பாரம்பரியமான ‘கோயம்புத்தூர் குடும்பத்தைச்’ சேர்ந்த பெண்ணான எனக்கு என் குடும்பத்தாரிடம் இருந்து, “ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லாதே, அது பாதுகாப்பானது அல்ல” என்பது போன்ற வழக்கமான அறிவுரைகள் அடங்கிய போன் கால்கள் மட்டுமே வரும் என்று எதிர்பார்த்திருந்தேன்.

ஆனால், என் எண்ணத்திற்கு மாறாக என்னிடம் பேசிய என் அம்மா இப்படி கூறினார் ! :

“நீ வெளியில் தங்கி இருக்கிறாய். உன்னை ஒரு வலிமையான, உறுதியான பெண்ணாக வளர்த்துள்ளதாகவே நம்புகிறேன்! எந்த நிலையிலும், உன் தந்தையும், நானும் உனக்கு பக்கபலமாய் இருப்போம்! யாரேனும் உனது படங்களையோ, வீடியோவையோ வைத்து மிரட்டல் விடுத்தால், எதற்கும் கவலைப்படாமல் ‘உன்னால் முடிந்ததை செய்துகொள்’ என கூறிவிடு. ஏனெனில், இந்த உலகத்திலுள்ள எல்லா பெண்களுக்கும் இருப்பதுபோன்ற வெறும் உடல்தான் இது. இதற்காக வெட்கப்பட ஏதுமில்லை!

ஒருவேளை இதுபோன்ற ஏதேனும் பிரச்னையை வருமெனில் அதை எதிர்கொள்ள ஒரு பெற்றோராக நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்!

உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!”

என் அம்மா என்னிடம் இப்படி பேசிய போது, எனக்கு அவரை கட்டிக் கொண்டு அழவேண்டும் போல இருந்தது! இத்தகைய நம்பிக்கையும், பாதுகாப்புமே ஒரு குடும்பம் உங்களுக்கு கொடுக்க வேண்டிய விலைமதிப்பில்லாத ஒன்று.

எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை தைரியமான பெண்ணாக இருங்கள். பெற்றோர்களே உங்களுடைய குழந்தைகளுக்கு உறுதுணையாக இருங்கள். உங்களின் ஆதரவைவிட அவர்களுக்கு வேறெதும் வலிமையாக இருந்துவிட முடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.