வெங்காயத்தை நறுக்கி வீட்டின் மூலையில் ஏன் வைக்க வேண்டும்..?

0 366

உலகம் முழுவதும் பல்வேறு சமையல் வகைகளில் பயன்படுத்தும் மருத்துவகுணம் மற்றும் சுவை நிறைந்த உணவாக வெங்காயம் உள்ளது.

அறிவியல் ரீதியாக, இந்த வெங்காயத்தை நமது வீட்டின் நான்கு மூலையிலும் நறுக்கி வைப்பதால், பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும்.

வீட்டின் மூலையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நாம் தூங்கும் அறையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகள், மூச்சுக்குழாய் அழற்சி இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

வீட்டின் நான்கு மூலையிலும் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் ஏராளமான நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்க முடியும்.

வெங்காயத்தில் உள்ள கந்தக அமிலம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதயநோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

வெங்காய சூப் மூலம் அதனுடைய இதர சுகாதார நன்மைகளை பெறலாம்.

இதற்கு 3 வெங்காயம், 3 பூண்டு, 1/4 கப் ஆர்கனோ இலை மற்றும் 4 கப் தண்ணீர் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, இதை இருமல் மருந்தாக குடிக்கலாம்.

கால்களில் வெங்காயத்தை வைத்து ஒரு துணியால் கட்ட வேண்டும். இதனால் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.