வீட்டில் புறா வளர்க்க ஆசையா..? புறா யாரெல்லாம் வளர்க்கலாம் தெரியுமா..? பிறகு பழகி விடும்…!

1,373

புறாக்கு ஆரம்பத்துக்கு பயறு தேனில் குழைய்த்து வைத்தால் பிறகு புறா வேறு இடம் போகாது என்பார்கள். அந்த சுவைக்காக வர ஆரம்பித்து பிறகு பழகி விடும்.

புறா வளர்ப்பதினால் கொஞ்சம் வருமானம் இருக்குமா? அது உங்கள் ஏரியாவைப் பொறுத்தது. செல்லப் பிராணியாக வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு சோடி இன்ன விலை என்று விற்கலாம். இறைச்சிக்கு விற்பது பற்றித் தெரியாது. அப்படி விற்பதானால் குஞ்சு அதன் அதி கூடிய எடை அடைந்ததும் விற்றுவிட வேண்டும். அதற்கு மேல் வைத்துத் தீனி போடுவது லாபமானது அல்ல. மேலும் அவை விரைவில் இணை தேடி குடும்பம் ஆரம்பித்தும்விடும்.

‘நட்டங்கள்’ பற்றிச் சொல்கிறேன். 😉 ஆரம்பத்தில் தெரியவில்லை, எல்லாம் ரசனையாகத் தான் இருந்தது.
பிற்பாடு வீட்டாரை விட புறாக்களுக்காக உணவுக்கென்று அதிகம் செலவளிக்கிறோமோ என்று தோன்றும். 😉
இரவில் எங்கு போனாலும் கதவை அடைக்க ஒரு ஆள் சொல்லிவிட்டுப் போகாவிட்டால் நிம்மதியாக இராது.
ஒவ்வொன்றாகக் குடும்பம் நடத்த ஆரம்பிக்க கூடுகளின் தேவை அதிகரிக்கும்.
சுற்றாடலில் போதுமான உணவு இல்லாவிட்டால் பறவைகள் ஆரோக்கியமாக இராது.

கூட்டைச் சுத்தம் செய்யும் வேலை இருக்கிறது. அழுக்கு சேரவிட்டால் வாடை இருக்கும். சுத்தம் செய்தாலும் கூட மழை தூறல் விழுந்தாலே ஒரு வாடை வரலாம்.
கூரை எல்லாம் அவர்கள் ராச்சியமாக இருக்கும். (இங்கு சில ப்ளாட்டுகளின் கூரைகள் பார்க்க அசிங்கமாக இருக்கும்.)
அப்பப்போ அயல் வாண்டுகள் வந்து திருடிக் கொண்டு போகப் பார்ப்பார்கள். 😉 அவர்களுக்கும் ஆசை இருக்கும் இல்லையா. 😉 துரத்துவது ஒரு வேலை இருக்கும். 😉
ஒரே ஒரு புறா உங்கள் கிச்சனுக்குப் போகும் பாதை கண்டுபிடித்தாலும் போதும் எல்லோரும் அடிக்கடி படையெடுப்பு நடத்துவார்கள். 😉
துணி காயப் போட கூடையோயோடு வெளியே போனாலும் தீன் என்று நினைத்துக் கூட்டமாகத் தரையிறங்குவார்கள். (எனக்கு இது கிட்டத்தட்ட ஒரு ‘அட்டாக்’ மாதிரியே இருக்கும்.) 😉
அழகழகாய் வளரும் செடிகளை எல்லாம் தின்று தீர்த்துவைப்பார்கள். இன்ன செடி என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால் நிறையச் செடிகள் அடியோடு காணாமற் போயிற்று.
வீட்டுக்குள் இஷ்டத்துக்கு வர ஆரம்பிப்பார்கள்.

இதை எல்லாம் சமாளிக்க ஒரு பெரீ…ய கூடும் அதனுள் போதுமான தீனியும் நீரும் இருந்தால் போதும்.
நான் படித்த பாடசாலையில் கூரை மேல் பெரிதாக ஓர் கூடு இருக்கும். அங்கு கான்வென்டில் விசேட தினங்களில் புறா சமைப்பார்களாம்.

பறவைகள் பெருகிய பின்னால் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வேண்டாம் என்று தோன்றினால் என்ன செய்வீர்கள்???? (சிலர் முட்டைகள் சாப்பிடுவார்கள். நீங்கள் புறா முட்டை சாப்பிடுபவரானால் பறவைகள் அதிகம் இராது.)
வேறு என்ன கேட்டப் போகிறீர்கள்? 😉 தெரிந்தால் சொல்கிறேன். எனக்கும் புறாக்கள் பிடிக்கும். அது எல்லாம் ஒரு கனாக்காலம்.

எதற்கும் உங்கள் பகுதியில் புறாவளர்ப்பினை யாராவது மேற்கொண்டிருந்தால் விசாரித்துப் பாருங்கள். விவசாயம் சம்பந்தமானவர்களிடமும் விசாரித்துப் பாருங்கள். இங்கு நத்தைப்பண்ணைகள் கூட இருக்கிறது,

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.