வீட்டிலேயே நெய் எடுப்பது பற்றிய காணொளி..! நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்

0 268

நெய் (Ghee) என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். நெய் என்பதன் ஆங்கிலச் சொல்லான Ghee என்பது வடசொல்லான घृत என்பதிலிருந்து வந்தது.

பாற்பொருட்களில் கூடுதல் சுவையையும் நறுமணத்தையும் கொண்டது நெய் ஆகும். தனியாகப் பிரித்தெடுத்த வெண்ணெய் அல்லது பாற்கொழுப்பை உருக்கும்போது நெய் உருவாகின்றது. வெண்ணெய்யை ஏறத்தாழ 100 பாகை செல்சியசு வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் கிடைக்கின்றது. நெய்யானது அதிலுள்ள செம்மியத்தின் அடிப்படையில் வெள்ளை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரையான நிறங்களில் காணப்படும். நெய்யில் ஏறத்தாழ எட்டு விழுக்காடு அளவில் தாழ்நிலைச் செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதனால் எளிதாகச் செரிக்கிறது. இவ்வமிலங்கள் மிகச்சிறந்த உண்ணத்தக்க கொழுப்புகள் ஆகும். மேலும் நெய்யைத் தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இவை காணப்படுவதில்லை. நெய், மீன் எண்ணெய் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தத் தாவர எண்ணெய்யிலும் கொழுப்பிலும் உயிர்ச்சத்து ஏ கிடையாது.

ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது. நெய்யில் உப்பு, பால் வெல்லம் போன்ற சத்துகள் கிடையா. நெய்யில் இலினோலெயிக்கு அமிலம் உள்ளது. இது உடல் பருப்பதைத் தடுக்கிறது. ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.