விவசாயிகளுக்கு மட்டுமே தெரிந்த சில விசயங்கள்,..! உங்களுக்கு தெரியுமா..?

0 527

எந்த பட்டத்தில் எந்த பயிரை பயிரிடுவது!

நினைத்த நேரத்தில் நினைத்த பயிரை, காய்கறிகளை பயிரிட முடியாது, அந்தந்த காலத்திற்கு ஏற்ப தான் விதைகள் முளைக்கும்..

இதை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன். 2017 ஏப்ரல் மாதம் எனது ஆசான் அறிவுரையை கேட்காமல் முள்ளங்கி விதை போட்டேன், ஆனால் கீரை மட்டுமே முளைத்தது, காய் வரவில்லை. அப்போது தான் அனுபவத்தில் கற்றுக்கொண்டேன்.

மூன்று போகம் விவசாயம் செய்த காலம் அன்று,
இன்று இரண்டு போகம் தான் விவசாயம் செய்கிறார்கள் காரணம் தண்ணீர் பற்றாக்குறை
மற்றும் பருவநிலை மாற்றம்.

அடுத்த மாதத்திற்குள்ளாக காவேரி நீர் தமிழகத்திற்கு வரவில்லையென்றால், ஒரு போகம் பொய்த்துவிடும். வருகிற வருடம் நாம் மற்ற மாநிலங்களிலும், நாட்டிலும் அரிசிக்கும், பருப்புக்கும், காய்கறிகளுக்கும் கையேந்தும் நிலை நிச்சயம்.

நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது, போர் போட்டு விவசாயம் செய்பவர்களுடைய பயிர்களும் இந்த கோடையில் தண்ணீரின்றி கருகப்போவது உறுதி.

ஐபிஎல் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், ஆனால் விவசாயம் அப்படியில்லை. இதனால் உடனடியாக பாதிக்கப்படபோவது விவசாயிகள், விவசாய நிலங்கள், அடுத்து நம் தலைமுறையினர் தான்.

#மழை
பருவநிலையை யாராலும் முன்கூட்டியே கனிக்க இயலாது, மழை எப்போது வரும், வராது என்று அவனுக்கு தெரியாது! பின் எதை நம்பி விதைப்பான்?

#ஆறு
தற்போது சில வருடங்கள் ஆயிற்று ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்து என்று அவனுக்கு தெரியும்! பின் எதை நம்பி விதைப்பான்?

#போர்
போர் இருந்தாலும் கோடையில் நீர்மட்டம் தஞ்சை பகுதியில் 250-500 அடி ஆளம் வரை இறங்கிவிடும் என்பதும் அவனுக்கு தெரியும், பின் எதை நம்பி விதைப்பான்?

ஆனாலும் விதைத்துக்கொண்டே தான் இருக்கிறான்!

நட்டம் வந்தால் அது அவன் தலையில் ஆனால்
லாபம் என்பது அரசாங்கம் மற்றும் மக்கள் கையில்! ஏனென்றால் அவன் பாடுப்பட்டு விதைத்த பொருளுக்கு விலை நிர்ணயப்பவர்கள் அரசாங்கமும் நாமும் தான்!

ஆனால் விதைத்துக்கொண்டே தான் இருக்கிறான், பாவப்பட்ட விவசாயி!

ஒரு விவசாயி எவ்வளவு சாம்பாதித்து விடுவான் என்று நினைக்கிறீர்கள்?

எவ்வளவு ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும், தண்ணீர் பற்றாகுறை வருமானால் தெரிந்தே எப்படி அனைத்திலும் விவசாயம் செய்வான்?

நான் சொல்வதை காட்டிலும், விசாயிகள் உங்கள் வரவு செலவு கணக்குகளை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ளட்டும்.

-தமிழன் சதிஸ்

You might also like

Leave A Reply

Your email address will not be published.