விந்து விட்டான் நொந்து கெட்டான் என்பதன் பொருள் என்ன எதனால் கூறினார்கள்..?

0 12,948

விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத வார்த்தை என்றும் நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள்.

நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.

சரி உண்மையில் விந்து என்றால் என்ன?

உடலுறவின்போது வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா? அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா?
இப்படி பலவிதமான கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள் இருந்தாலும்

அதை வெளிபடையாக பேசி தீர்த்து கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும் ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை.

இதை பயன்படுத்திகொண்டுதான் லாட்ஜ் டாக்டர்களும் ,பரம்பரை சித்த வைத்திய கேடிகளும் நமது மக்களின் மண்டையை குழப்பி பணம் சம்பாரித்து கொண்டு இருக்கிறார்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்.

விந்து என்றால் என்ன?

விந்து என்றால் உயிர்.விந்து சக்தி என்றால் உயிர் சக்தி.உதாரணமாக ஒரு பல்பு எரிய ஒருவகையான சக்தி தேவை அதை நாம் மின் சக்தி என்கிறோம்.. தண்ணிரை கொதிக்க வைக்க வெப்ப சக்தி தேவை.

இது போல இந்த உலகில் ஒவ்வொரு செயலை செய்யவும்,எந்த ஒரு பொருள் அசைக்கவும் ஒரு வகையான சக்தி தேவை. அது போல நமது இந்த உடல் எந்திரத்தை இயக்கவும் ஒரு சக்தி தேவைபடுகிறது.அந்த உயிர் சக்தியை கொடுப்பது தான் இந்த விந்துவின் வேலை.சுக்கிலம் என்று சொல்லகூடிய இந்த விந்துவானது,நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியில் இருந்து உண்டாக்கபடும்,பிறகு இந்த சக்தியானது உயிர் அணுக்கள் சேர்க்க பட்டு விந்துவாக உடலில் சேமிக்க படுகிறது. இந்த விந்து சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பித்தல் மற்றும் சேதாரமடைந்த செல்களை சரி செய்வதாகும்.

புதுப்பித்தல் முடிந்ததும் தேவைக்கு அதிகமாக சேமிக்கப்படும் விந்துவானது,விந்து பை நிரம்பியவுடன் தன்னிச்சையாகவோ அல்லது காம கனவுகளுடனோ வெளியேறி விடும்.ஒருவன் அதிகமான விந்தை செலவழிக்கும் போது அவனது சேதாரமான செல்களை சரி செய்யவும் புதுப்பிக்கவும் வழி இல்லாமல் அந்த உடல் தளர்வடைந்து சீர்கெடுகிறது.

செல்களை புதுப்பித்தல் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியது.
1 சதை வளர்ச்சி
2 எலும்பு வளர்ச்சி
3 ரோம வளர்ச்சி
4 அறிவு வளர்ச்சி
5 தோல் பொலிவு
6 உயிரணு உற்பத்தி
7 உடலுறுப்புகள் பேணுதல்

ஒருவன் தேவைக்கு அதிகமான விந்தை செலவழிக்கும் போது, மேல் சொன்ன வளர்ச்சிகள் தடை படுகிறது,அங்கு உடல் நலம் கெடுகிறது.இன்றும் கிராமங்களில் ஆட்டு கிடாய்களுக்கு ஒடை தட்டும் வழக்கம் உள்ளது.ஏன் என்று கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் ஒடை தட்டினால் சதை நன்றாக வளரும் கொழுப்பு நிரம்ப இருக்கும் என்று.

இதை நாம் விந்துவின் முக்கியதுவத்துக்கு சான்றாக எடுத்துகொள்ளலாம்.அதிகமான விந்தை இழக்கும்போது அந்த உடல் நலிந்து தளர்ந்து சீர்கெட்டுபோகிறது,அத்துடன் உடல் இளைப்பு, பசி இன்மை ,மன குழப்பம் , துக்கம் இன்மை போன்றவைகளும் சேர்ந்துகொள்கிறது.

இதைதான் விந்துவிட்டான் நொந்துகெட்டான் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.