வாருங்கள் தமிழக அழிவை உங்கள் கண்முன் எளிதில் காட்டுகிறேன்..! பயணத்திற்கு தயரா..?

0 532

நாட்டை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை அதை காக்க ரானுவ வீரன் தினமும் உயிரை விட்டுக்கொண்டிருப்பதால்..!

நாட்டை ஆளும் ஆட்டசியாளனை பற்றி குறைகூற போவதில்லை காரணம் அவனை தேர்ந்தெடுத்தது மக்கள் என்பதால்..!

பணியில் லஞ்சம் வாங்குபவனை குறைகூற மனது வரவில்லை காரணம் லஞ்சம் கொடுப்பது நாமக இருப்பதால்..!

வாகனத்தில் செல்லும் போது வழிமறித்து ஆவணம் கேட்கும் அதிகாரிகாரிகள் குறைவுதான் பணம் கேட்கும் விபச்சாரிகள் தான் அதிகம்..!

வாகனத்தை சோதனையிடுபவர்கள் என்றாவது வங்கியில் பணத்தை பெற்று கட்டாமல் தைரியமாக ஊர் சுற்றுபவனை வழிமறித்தது உண்டா..?

அரசியல்வாதிக்கு அனைத்தும் சலுகை அனால் அவனுக்கு வாக்களித்தவனுக்கு..?

எத்தனையோ ஆராய்ச்சி நடக்கும் எந்நாட்டில் அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பை பற்றி இதுவரை ஒரு ஆராய்சிகூட நடந்ததில்லையோ எப்படி..?

அதிகாரிகள் மக்களிடம் திமிரை காட்டும் போது மக்கள் அடிபணிந்தால் தான் அங்கு வேலை நடக்கும நிலை உருவானதே இது எப்படி..?

அரசு கட்டிடம் பாலம் கட்டும் போது தர சோதனைக்கு வராத அதிகாரியெல்லாம் இடிந்து விழுந்த பிறகு தர சோதனைக்கு வருகிறானே இது எப்படி..?

பாலில் கலப்படும் என்று கூவிகொண்டிருந்தவன் பொட்டிவந்ததும் அமைதியானானே இது எப்படி..?

படித்தவனுக்கே வேலை இல்லாதபோது படிக்காதவனெல்லாம் பள்ளிகல்விதுறை அமைச்சர் ஆனானே இது எப்படி..?

சுகாதாரதுறையில் இருந்து குட்கா விற்க பலகோடி லஞ்சம் பெற்றானே இது எப்படி..?

குறைந்த விலையில் அதிக மணல் தர பிறநாடுகள் முன் வந்தபோதும் தடுத்து நிறுத்தினானே இது எப்படி..?

அனைத்து அழிவு ஆலைகளுக்கும் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்து இன்று அவற்றிற்கு எதிராக போராட்டம் நடத்தி அரசியல் செய்கிறானே இது எப்படி..?

தகுதி இருந்தும் பணம் இல்லா காரணத்தில் பல இடத்தில் சாமானியன் பின் தள்ளப்படுகிறானே இது எப்படி..?

ஒவ்வொரு அமைச்சரும் திருடுகிறான் கொள்ளையடிக்கிறான் என்று அடிதட்டு மக்களுக்கு தெரியும் போது அந்த துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இருப்பது எப்படி..?

விவசாயத்திற்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கியும் நாளுக்கு நாள் விவசாயம் அழிந்துகொண்டே செல்கிறதே இது எப்படி..?

இனியும் சொல்ல என்னிடம் நிறைய உள்ளது படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பதை நான் அறிவேன் இத்தோடு நிறுத்திகொள்கிறேன்..?

இனி நான் அளிக்கும் வாக்கு மேற்கூறிய இவை அனைத்தையும் மாற்றி அமைக்கும் என்று உன்னால் உறுதியாக கூறமுடிகிறதே அன்றே மாற்றம் நிகழம்

மாற்றத்தை நோக்கி….

You might also like

Leave A Reply

Your email address will not be published.