வாரிசையே அழிக்க துவங்கும் செயற்கை கரு ஊசி..! ஆபத்தின் பிடியில் தூய இனத்தை இழக்கிறோம்..!

0 750

பொங்கல் பண்டிகையின் நோக்கமே விவசாயிகளுக்கு உதவும் சூரியனையும், மாடுகளையும் நினைவில் கொண்டு பூஜிப்பதுதான்.

ஆண்டு முழுவதும் தாவரங்களின் ஒளிச்சேர்கைக்கு உதவும் சூரியனுக்கு, சூரியப்பொங்கல் வைத்துப் படைப்பது முதல் நாள். அடுத்த நாள், மண்ணுக்காகவும், மனிதர்களுக்காகவும் உழைக்கும் மாடுகளை கௌரவிக்கும் விதமாக, அலங்கரித்து, படையலிட்டு கொண்டாடுவார்கள். இதெல்லாம் ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் கடைபிடித்து வரும்… பண்பாட்டு வழக்கம்.

ஒரு காலத்தில் வீடுகளில் மாடுகள் இருப்பது கௌரவம் என்ற நிலை, எந்திரங்களின் வரவுக்குப் பிறகு மாறிவிட்டது. பெரும்பாலான தொழுவங்களில் டிராக்டர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், மண் மீதும், மாடுகள் மீதும் உள்ள பாரம்பர்யப் பிணைப்பை அறுத்தெரிய விரும்பாத பலர், இன்றைக்கும் மாடுகளை…நாட்டு மாடுகளைப் பராமரித்து வருகிறார்கள்.

நாம் மறந்துபோன, பாரம்பர்ய விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாட்டு மாடுகளின் பங்களிப்பு அபாரமானது. இவற்றின் சிறப்பே, குறைந்த தீவனத்தை எடுத்துக் கொண்டு உழவுக்கு உதவி செய்வதோடு, கணிசமான அளவில் பாலும் கொடுப்பதுதான். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்கு தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய்க்குக்கூட தனிச்சுவை இருப்பதை மறுக்க முடியாது!

காங்கேயம், உம்பளாச்சேரி, புலிகுளம், மணப்பாறை, பர்கூர்… என தமிழ்நாட்டுக்கென பாரம்பர்ய ரகங்கள் இருப்பதுபோல… ஆந்திராவுக்கான சிறப்பு, புங்கனூர், ஓங்கோல் இன மாடுகள்.

அதிலும் ‘புங்கனூர் குட்டை’ என்ற ரகம் இந்திய மாட்டினங்களில் அருகி வரும் இனமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையோரத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டம், புங்கனூர் மாடுகளுக்குப் புகழ்பெற்ற பகுதி.

‌இந்திய இனங்கள்ல 32 வகைகள் இருக்கு. அதுல நாலு ரகங்கள், குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. கேரளாவுல இருக்கிற வெச்சூர், மலநாடு கிட்டா, காசர்கோட் குள்ளன் கிட்டா மாடுகள் மாதிரியே…

இந்த புங்கனூர் இன மாடுகளும் குள்ளமானவை. மூணு, நாலடி அடி உயரம்தான் இருக்கும். இந்த ரகத்தை, சித்தூர் மாவட்டத்துல இருக்கிற புங்கனூர் ஜமீன்தார், அவரோட பண்ணையில வெச்சு பராமரிச்சு பிரபலபடுத்தினதா சொல்றாங்க. அதனால இதுக்கு ‘புங்கனூர் குட்டை’னு பேர் வந்துச்சு” என்று பெயர் காரணம்
‌முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டு மாடு இனங்களும், நாப்பதுக்கும் மேற்பட்ட ஆட்டு இனங்களும் இருக்கு.

அந்தந்தப் பகுதி கால நிலைக்கு ஏற்பத்தான் கால்நடைகளும், அதன் குணாதிசயங்களும் இருக்கும். ஆந்திராவுல இருக்கிற புங்கனூர் குட்டை என்ற ரகமும் நாட்டு இனம்தான்.

அதேமாதிரி, தமிழ்நாட்டோட நாட்டு இனங்களான காங்கேயம், புலிகுளம், உம்பளாச்சேரி, பர்கூர் இன மாடுகளும் நம்முடைய சீதோஷ்ண நிலையில் இருப்பவை. தற்போது, நாட்டு இனங்களுக்கான கருவூட்டல் ஊசியும் அந்தந்தப் பகுதி அரசு கால்நடைப் பண்ணைகளில் கிடைக்கிறது.

உதாரணமாக, காங்கேயம் இனத்தின் கருவை அதே இனப் பசுவுக்கு செலுத்தினால்தான், ஒரிஜனல் இனமாகக் கிடைக்கும். இல்லாவிட்டால், குணாதிசயம் மாறி, கலப்பினமாகிவிடும். அந்தந்தப் பகுதி கால நிலைக்குப் பொருந்திப் போகிற இனங்களை வளர்த்து… நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.