வனப்பகுதியில் நடந்த உயிரோட்டமான உண்மை சம்பவம்..!

0 274

காட்டு விலங்குகள் பெரும்பாலும் மற்ற விலங்குகளை அடித்துக்கொன்று சாப்பிடும் உணவுக்காக எதை வேண்டுமானாலும் அடித்துக் கொல்லும் என்ற ஒரு கொடூரமான பிம்பம் தான் நம்மிடம் இருக்கிறது. அதே போல தான் செய்த தவறை உணர்வது, அதற்காக வருந்துவது என்பதெல்லாம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது.

ஆம் காட்டு விலங்கு ஒன்று மனிதர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றினை நிகழ்த்தியிருக்கிறது.

காடு :

தென் ஆப்ரிகாவில் இருக்கும் மிகப்பெரிய காடு இது. முன் கூட்டியே புக் செய்தால் மட்டுமே இந்த காட்டிற்குள் செல்ல அனுமதி கிடைக்கும் . ஆரம்பத்தில் இந்த இடம் விவசாய இடமாக இருந்திருக்கிறது. பின்னர் வறட்சி அதிகரித்ததன் விளைவாக விவசாயம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

பின்னர் 1991 ஆம் ஆண்டு அந்த இடம் காட்டு விலங்குகளின் வாழ்விடமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. இங்கே ஜீப் சஃபாரி மிகவும் பிரபலம். அதோடு இங்கு ஸ்பா, ஹோட்டல்,ரெஸ்ட்டாரண்ட் போன்றவையும் இருக்கிறது.

ஜீப் பயணம் :

ரிசர்வ் ரேஞ்சரான ஜெர்ரி வான் தேர் வால்ட் (Gerry Van Der Walt) என்பவரின் கண்காணிப்பில் ஒரு குழு காட்டிற்குள் ஜீப் சஃபாரி சென்றிருக்கிறார்கள். அப்போது அவர்கள் பார்த்த காட்சி மனித மனங்களை எல்லாம் உலுக்கிடும் காட்சியாக அமைந்து விட்டது.

சுற்றிலும் காய்ந்து சருகான இலை தலைகள் கிடக்கிறது. பச்சை பசேலென இருக்க வேண்டிய இலைகளும்,புற்களும் காய்ந்து மஞ்சள் நிறமே தனக்கான நிறமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. மண் தரை வழியாக தூரமாக ஜெர்ரியின் வாகனம் வந்து கொண்டிருக்கும் போது சிங்கம் ஒன்று மானை துரத்துவது தெரிகிறது.

சிங்கத்தை பார்த்து விட்ட ஆச்சரியத்தில் சிங்கம் வேகமாக ஓடுகிறது… அது ஒரு மானைத் துரத்துகிறது என்று வாகனத்தில் இருந்து எட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிங்கம் உட்கார்ந்து விட்ட இடத்திற்கு நெருங்கியதும் வாகனம் வேகம் குறைக்கப்பட்டு முற்றிலுமாக வண்டி நிறுத்தப்பட்டது.

மான் மரணம் :

அங்கே முன்னால் ஓடிய மான் இறந்து கிடக்க, சிங்கம் அருகில் உட்கார்ந்து தன் தலையை குனிந்திருந்தது. சிங்கம் ஜெயித்து விட்டது. தனக்கான உணவை வேட்டையாடி விட்டது.

அந்த மான் இறந்து விட்டது. அதனை சிங்கம் சாப்பிடப்போகிறது என்று சொல்லி ஒவ்வொருவரும் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டனர். சிங்கமும் சாப்பிட ஆரம்பித்தது.

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. காட்டு விலங்கான சிங்கம் தனக்கான உணவாக மானை வேட்டையாடிக் கொல்கிறது. இது அன்றாடம் நிகழ்வது தானே என்று கடந்து போகக்கூடிய சம்பவமாக இது இருக்கவில்லை. வண்டியில் சென்றவர்கள் அதனை பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

தங்கள் கேமராக்களுக்கு உயிரூட்டி அந்த தருணத்தை புகைப்படங்களாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாதி வெளியேறிய குட்டி :

வண்டியை கொஞ்சம் லேசாக முன்னால் நகர்த்தினால், இறந்து கிடந்த மானின் பின்புறத்திலிருந்து குட்டியொன்று பாதி வெளியேறிய நிலையில் கிடந்தது.

அங்கே வண்டியில் பார்த்தவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி. கர்ப்பிணியான மான் தன்னையும் வயிற்றிலிருக்கும் தன் குட்டியையும் காப்பாற்ற எந்த அளவுக்கு போராடியிருக்கும்.

அதற்காகத்தானே அவ்வளவு வேகமாக ஓட்டமெடுத்தது, ஆனால் அது எல்லாம் வீணாகி இறந்து விட்டதே என்று இறந்து கிடந்த மானின் போது இப்போது கரிசனம் அரும்பியது.

சிங்கத்தின் அடுத்த நகர்வு :

இப்போது இந்த சிங்கம் ஈவு இரக்கமின்றி அதனைத் தின்றிடுமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே சிங்கம் மெதுவாக பாதி வெளியேறிய நிலையில் இருந்த மான் குட்டியை நுகர்ந்து பார்த்தது.

ஐயயோ…. இன்னும் சரியாக பிறக்கக்கூட வில்லை அதற்கு சிங்கத்திற்கு இரையாக வேண்டுமா? என்ற பதைதைப்பில் அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்று காத்திருந்தார்கள்.

இறந்த கிடந்த மானை சுற்றுச் சுற்றி வந்தது அந்த சிங்கம். சற்றித் தள்ளி அருகிலேயே உட்கார்ந்து கொண்டது. ஜீப்பில் இருந்தவர்களும் சிங்கத்தின் அடுத்த செயல்பாடு எப்படியிருக்கும் ? அந்த குட்டியை என்ன செய்யப்போகிறது என்ற ஆவலில் அப்படியே காத்திருந்தார்கள்.

பிரசவம் பார்த்த சிங்கம் :

சிறிது நேரம் கழித்து உட்கார்ந்திருந்த சிங்கம் மீண்டும் எழுந்து மானுக்கு அருகில் சென்றது சுற்றிச்சுற்றி வந்தது. பாதி வெளியில் வந்திருக்கும் குட்டியை எட்டிப் பார்த்தது.

நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு வழியாக தன் வாயால் குட்டியைக் கவ்வி வெளியில் இழுத்துப் போட்டது. அங்கே வண்டியில் நின்றிருந்தவர்களுக்கு ஒரு நிமிடம் உறைந்தே போனார்கள்.

கீழே விழுந்த குட்டியை நாக்கால் தடவிக் கொடுத்தது. வேகமாக மூச்சைக் கொடுக்க முயற்சி செய்தது. சுற்றியும் நாக்கினால் குட்டியை தடவிக் கொடுத்துக் கொண்டேயிருந்தது.

தானாக எழும் :

பின்னர் அந்த குட்டியை தூக்கி புற்கள் அடர்ந்திருக்கும் பகுதிக்குள் சென்றுவிட்டது சிங்கம். அங்கே அந்த குட்டியை போட்டு விட்டு இது சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டது.

அந்த குட்டி தானாக எழுகிறதா? என்று சோதித்திருக்கிறது. அருகில் சென்று பார்ப்பதும், பின்னர் தள்ளி வந்து உட்காருவதுமாய் நீண்ட நேரம் இப்படியே நடந்திருக்கிறது.

சிங்கத்திற்கு கர்ப்பமான மானைக் கொன்றுவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி மேலோங்கியிருக்கும் போல முகத்தில் அவ்வளவு சோகம். அந்த குட்டி எப்படியாவது முழித்துவிடாது, அதன் மூச்சு சத்தத்தை கேட்டிட மாட்டோமா என்கிற பரிதவிப்பு என சிங்கத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளுமே உணர்த்தியது.

மன்னித்து விடு :

நீண்ட நேரமாக குட்டி எழுந்தரிக்கவேயில்லை. உன்னையும் உன் குட்டியையும் கொன்றுவிட்டேன் என்னை மன்னித்து விடு என்று மனதில் நினைத்திருக்குமோ என்னவோ இறந்து கிடந்த மானுக்கு அருகில் நீண்ட நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தது.

ஆம், சிங்கம் தன்னுடைய செயலை நினைத்து மிகவும் வருந்தியது. இறந்த குட்டியினை தன்னுடைய குட்டியைப் போலவே வாஞ்சையாக அள்ளிக் கொண்டது. வாயில் தூக்கி புற்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் பகுதிக்குள் சென்றது.

குற்ற உணர்ச்சி :

இறந்த குட்டியை புதைப்பதற்காகத்தான் அப்படி செய்கிறது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். அங்கே குட்டியை போட்டுவிட்டு சிங்கம் வெளியில் வந்து ஏதோ ஒரு வித தடுமாற்றத்துடனே நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தது.

அவ்விடத்தை விட்ட செல்ல மனமில்லாமல் சிறிது அங்கே அங்கேயே சுற்றுச் சுற்றி வந்தது. பின்னர் இறந்த கிடந்த மானுக்கு அருகில் சென்று மேற்கொண்டு செய்வதறியாது, மானின் வயிற்றுக்கு அருகில் தன் முகத்தை சாய்த்து உட்கார்ந்து கொண்டது.

தான் பெரும் தவறு இழைத்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியுடன் தலையை குனிந்து கொண்டே நகர்ந்து சென்றது அந்த சிங்கம்.

காட்டு விலங்கான சிங்கத்திற்குள் இப்படியான நெகிழ்ச்சித்தருணம் இருக்கும், தன் தவறை நினைத்து வருந்தும் என்பது இதுவரை நாம் கேள்விப்படாது ஒன்று. ஆனால் இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.