யாரடா நாட்டுப்பற்றாளன்..?எந்த கேள்விக்கும் பதில் சொல்லாது, அடக்குமுறையை ஏவும் ஆட்சியாளன் மட்டும், தேசத்தியாகி ஆகி விடுவானா?

0 251

ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை,
ஏசி ரூமில் உட்கார்ந்து சிதைப்பார்களாம்,
எதிர்த்து கேள்வி கேட்டால்
அவன் தேசத்துரோகியாம்!
அப்படியென்றால்..,
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாது,
அடக்குமுறையை ஏவும்
ஆட்சியாளன் மட்டும்,
தேசத்தியாகி ஆகி விடுவானா?

நாடாளுபவன் சரியாக இருந்தால்தான்டா,
நாட்டுப்பற்று தானாக வளரும்!
நாட்டுப்பாடலை பாடித்தான் ஆகணும்
என்று சட்டம் போட்டால் மட்டும்,
நாட்டுப்பற்று வளர்ந்து விடுமா?

40 விழுக்காடு வாக்குகள் வாங்கி
ஆட்சியைப் பிடித்தோம் என்று,
பீற்றிக்கொள்ளும் ஆட்சியாளனே!
60 விழுக்காடு எதிராக வாக்குகள்
விழுந்துள்ளதை மறந்து விடாதே!

யாரடா நாட்டுப்பற்றாளன்?

முறைகேடாக அதிகாரம் செய்பவனா?
உரிமைக்காக முறையிடுபவனா?

” தாய்நாட்டின் குறைகளை,
துணிச்சலாக
வீதியிலிறங்கி கத்துற
ஒவ்வொருத்தனும்
சிறந்த நாட்டுப்பற்றாளன் தான்டா!”

ஆக்கம் மைக்கேல் இராஜன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.