யானைகள் நினைத்தால் சங்கிலியை அறுத்து எளிதாக செல்ல முடியும் ஆனால் ஏன் முயற்சிப்பதில்லை..?

0 325

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன், யானைகளை பார்த்தபடியே சென்றான்.

ஒரே ஒரு மெல்லிய சங்கிலி மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருந்தது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான்.

அருகில் இருந்த பாகனிடம்,
“இந்த யானைகள் இதை அறுத்து கொண்டு போகாதா..!?”
என்று கேட்டான்.

அவன் சிரித்தபடி, “இந்த யானைகள் குட்டியாக இருக்கும்போது இதில்தான் கட்டிவைத்தோம்.

அப்போது அது எவ்வளவோ இழுத்து பார்த்தும், இந்த சங்கிலியை அறுக்க முடியவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் இதை அறுக்க முடியாது என்கிற எண்ணமும் சேர்ந்தே வளர்ந்தது.

இப்போது அந்த எண்ணம் மனதில் பதிந்து, அறுக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டது. அறுக்க முயற்சிப்பதேயில்லை..” என்று சொன்னான்.

அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான், இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த சங்கிலியை அறுத்து கொண்டு போகலாம். ஆனால் அவைகள் அதற்கான முயற்சியை செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன.

இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் “முன்பு சில முறை தோற்றதனால், மீண்டும் முயற்சிக்காமலேயே துவண்டு போகிறோம். முயற்சிப்பதையே விட்டு விடுகிறோம்..சிந்தித்துப்பாருங்கள் !!!!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.