மாதவிடாய் காலத்தில் ஆண்கள் செய்யவேண்டியவை..? ஆண்களே அலட்சியபடுத்தாதீர்..!

0 2,064

உங்கள் மனைவியோ, காதலியோ, தங்கையோ தேவையில்லாமல் கோபப்படுவதாக நீங்கள் நினைத்து இருக்கிறீர்களா?

அவர்கள் மீது உங்களுக்கு வெறுப்புகூட வந்திருக்கும். ஆனால் ஏன் அவர்கள் அப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா?

அவர்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் தான் இதற்குக் காரணம். என்ன மாற்றங்கள் என்று நூறு சதவீதம் புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் அந்த நேரத்தில் ஆதரவாய் இருப்பது உங்கள் கடமை.

அதிக அன்பை செலுத்துங்கள்

சிறு விஷயங்களில் ஆச்சரியப்படுத்துங்கள்

வீட்டு வேலைகளில் உதவுங்கள்

மாதவிடாய் நாட்களில் பெண்கள் பொதுவாகவே சோர்வுடன் இருப்பார்கள். அலுவலகத்தில் அந்த சோர்வைத் தாண்டியும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கும். வீட்டு வேலைகளையும் அவர்களே பார்க்க வேண்டும் என்பது இல்லை. முடிந்த வரை, வீட்டில் உள்ள வேலைகளுக்கு உதவி செய்யுங்கள். அவர்களின் பெரும் பாரத்தை, நீங்கள் குறைத்ததாக உணர்வர்கள்.

மாதவிடாய் சுழற்சியை நினைவில் கொள்ளுங்கள்

உங்களால் மேலே சொன்ன எந்த விஷயத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும் கூட, அவர்களின் மாதவிடாய் சுழற்சியை குறித்து வையுங்கள். இது 28 நாட்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒன்று. இதில் 21-28 நாட்களில், உடல் ரீதியான மாற்றங்கள் நடக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு தலைவலி, முதுகுதண்டு வலி, அடி வயிறு வலி போன்றவை ஏற்படும். ஒரு வாரத்திற்கு முடிந்த வரை அமைதியாய் இருக்க முயற்சியுங்கள்.

பெண்ணின் இடத்தில் இருந்து அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் படும் அவஸ்த்தையை உங்களால் உணர முடியாவிட்டாலும் கூட, அவர்களுக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஓவ்வொரு மாதமும் ஏற்படும், அது அவர்களுக்கு வலியை கொடுக்கும் என்று புரிந்து கொண்டாலே போதுமானது. நீங்கள் கொடுக்கும் அன்பு அந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையானதாக இருக்கக் கூடும்.

– நந்தினி சுப்பிரமணி

You might also like

Leave A Reply

Your email address will not be published.