மாதம் மாதம் மாத்திரை வாங்கி கொடுத்து விடுகிறாள் மகனோ இங்கில்லை..!

0 303

வீட்டிற்குள் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது வெளியில் யாரோ ஒருவரின் சத்தம் எழுந்து சென்று பார்த்தேன்..!

பேரான்டி குடிக்க கொஞ்சம் தண்ணி குடுப்பா என்றால் ஒரு பாட்டி இருங்க எடுத்து வருகிறேன் என்று சற்று நகர்ந்து தண்ணீரை எடுத்து வந்தேன் அதற்குள் தன் சுருக்குப் பையில் இருந்து விதவிதமான மாத்திரைகள் கையில் எடுத்தாள்..!

சற்று ஆச்சரியம்தான் அந்த பாட்டியின் வயது எப்படியும் ஒரு எழுவதை கடந்து இருக்கும் பிறகு ஏன் இவர்கள் இவ்வளவு மாத்திரைகள் போடுகிறார் என்ற ஆச்சரியம் தான் எனக்கும்.

சற்று தண்ணீரை கொடுத்து பாட்டியிடம் பேச்சை தொடங்கினேன் இவ்வளவு மாத்திரை போட்டிங்களா ஏன் பாட்டி அதற்கு அந்த பாட்டி கூறினாள் வெயிலில் நடந்தால் வேர்வை வந்தால் உடலில் பல மாற்றங்கள் வருகிறது மருத்துவமனைக்குச் சென்றபொழுது வேலை நடக்கும் பொழுது வேலை செய்யும்போது இந்த மாத்திரையைப் போட்டுக் கொள்ளு மாறு கொடுத்தார்கள் என்றாள்.

பிறகு நான் ஏன் பாட்டி உங்க காலத்துல இதெல்லாம் இல்லையே இப்ப நீங்க மட்டும் ஏன் இப்படி மாறிட்டீங்க அப்படின்னு கேட்கும்போது நான் சித்த வைத்தியம் இயற்கை மருந்து நான் பயன்படுத்தி கொண்டிருந்தேன் ஒருமுறை எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்து கீழே விழுந்தேன்.

மருமகள் அப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் மருத்துவமனை சென்றவுடன் அங்கு மருத்துவர்கள் சத்துப் பற்றாக்குறை நீர்ச்சத்துக் குறைவு என்று பலவித காரணங்கள் கூறி பலவித மாத்திரைகளை கொடுத்தார்கள் அந்த மாத்திரைகள் போட்ட பின்பு சிறிது நன்றாக தான் இருந்தது ஆனால் அந்த மாத்திரை ஒரு நேரம் போடவில்லை என்றாலும் உடலில் பல வித மாற்றங்கள் வந்து உடனே மாத்திரையை தேடுகிறது கைகள்

மாதம் மாதம் மாத்திரை வாங்கி கொடுத்து விடுகிறாள் மகனோ இங்கில்லை சித்த மருத்துவத்தையும் இயற்கை மருத்துவத்தின் தேடிச்சென்று பிடுங்கி வந்து சாப்பிடும் அளவிற்கு வயதில்லை அதனால் இதையே வாடிக்கையாக்கிக் கொண்டேன் சொல்லும் போது கண்ணில் ஓரமாக கண்ணீர் கசிந்தது பாட்டிக்கு எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

சாப்ட்டு போறீங்களா என்று கேட்டேன் மருத்துவர்கள் கூறிய உணவுதான் சாப்பிட வேண்டும் என்று கூறி உணவையும் கூட வேண்டாம் என்று கூறிவிட்டார் அவள் பாட்டி.

இவர்கள் வாழ்ந்து விட்டார்கள் நினைக்கும்போதே என் கண்ணில் கண்ணீர் கசிகிறது ஆனால் நாமெல்லாம் இன்னும் வாழவே இல்லை நமது தலைமுறைகள் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று நினைக்கும்போது இதயமே பதறுகிறது என்னதான் வளர்ச்சி வளர்ச்சி என்று வளர்ந்து கொண்டே சென்றாலும் சிலவற்றில் பழமை மாறாமல் இருப்பது உலகுக்கும் உடலுக்கும் நல்லது அதில் ஒன்று உணவு முறைகள் மருத்துவ முறைகள்.

ஆங்கில மருத்துவம் என்பது தற்போது அடிப்படை தேவை அதை எதிர்ப்பவன் நான் அல்ல ஆனால் தேவையின் போது மட்டும் பயன்படுத்துவோம் உடல் நலத்திற்காக முடிந்த அளவு நடை பயணம் மேற்கொள்வோம் எங்கு நோக்கினும் வாகனங்கள் ஒரு நாளைக்கு சிறிது தூரமாவது நடந்துசெல்வோம்

நாம் நடக்கவில்லை என்றால் நாளை நமது பிள்ளைகள் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள் அனைத்தும் கார் வண்டி என்றே சென்று கொண்டே இருந்தால் எதிர்காலம் எப்படி முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்..?

முடிந்த அளவு மூலிகை செடிகளை இயற்கையை போற்றி பாதுகாப்போம் என்றாவது ஒருநாள் தமிழினம் மீண்டும் தேட ஆரம்பிக்கும் அன்று அவர்கள் தேடும் பொழுது இதையாவது விட்டுச் செல்வோம்

குறிப்பு: இதில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் எடுக்கபட்டது (இந்த சம்பவத்தில் வரும் பாட்டியை புகைப்படம் எடுக்கவில்லை)

You might also like

Leave A Reply

Your email address will not be published.