மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறு கோரிக்கை

0 241

 

மாட்டின் உரிமையாளர்கள் கவனத்திற்கு

மாட்டின் மணியின் உட்புறம் உங்களது தொலைபேசி எண் முடிந்தால் முகவரி எழுத வேண்டும்….

இழு கயிறுடன் விடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்…
(இதனால் காளை மரத்தின் வேர்ப்பகுதியில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது)….

முடிந்தால் என் காளையை பிடித்துப்பார் என்பதை கூறுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்…..

காளையை அவிழ்த்த பிறகு இரு சக்கர வாகனத்தில் காளையை பின் தொடர்வதை நிறுத்துங்கள்….
(இதனால் மாடுபிடி வீரர்களுக்கும் இடையூறு காயங்களும் ஏற்படுகிறது)

மாடுபிடி வீரர்களின் கவனத்திற்கு

காளை பிடிபட்டவுடன் தயவு செய்து கீழே சாய்த்து அதன் அடையாளங்களை அவிழ்க்க வேண்டாம்…..

ஒரு குழுவில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருப்போம் அதனால் காளை பிடிபட்டவுடன் நிறுத்தி வைத்து அவிழ்த்து கொள்ள பழகிக் கொள்ளவும் …..

தண்ணீரில் இறங்கிய காளையை பிடிக்க வேண்டாம் ….

வயல் வரப்பில் தடுமாறி விழுந்த காளைகளை பிடிக்க வேண்டாம்….

காளை பிடிபட்ட பிறகு மணியை வாங்க வரும் உரிமையாளரிடம் ,
காளையை பிடித்து விட்டோம் என்பதற்காக காணிக்கையை நீங்கள் நிர்ணயம் செய்ய வேண்டாம்….

உரிமையாளர் வெகு தொலைவில் இருந்து காளை கொண்டு வந்து இருக்கலாம்,
அவர்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் அவற்றையும் நாம் சிந்திக்க வேண்டும்…..

உரிமையாளர் 1 ரூபாய் காணிக்கை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வரவேண்டும்…..

நாம் பணத்திற்காக காளைகளை பிடிப்பது இல்லை…..

நம் குழுவின் வீரம் , அடையாளம்…..

நம் ஊரின் பெருமை , புகழ் ……

ஒரு காளையை இரு குழுக்கள் பிடித்தால்
விட்டுக்கொடுத்து போக வேண்டும்…..

வருகின்ற காணிக்கையை சம பங்காக பிரித்து எடுத்து கொள்ளவது அழகு….

வீண் விவாதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்…..

இரு குழுக்களும் வீரர்கள் தான்

நண்பர்கள் தான் என்று மனம் ஒத்து செல்லவேண்டும்…..

சில நபர்கள் ஊர்ச்சண்டை , நண்பர்கள் சண்டை , பழைய மஞ்சுவிரட்டு சண்டை , சாதி சண்டை இதை பழிக்குப் பழி வாங்க சரி செய்ய மஞ்சுவிரட்டு களத்தினை பயன்படுத்துகின்றனர்
இது வருத்தப்படக் கூடிய விசயம் இதனை தவிர்த்து விடுங்கள் ….

நன்றி முகநூல்

பிடித்திருந்தால் பகிருங்கள்

காளை வளர்ப்பவன் என்ற முறையிலும் மாடுபுடி வீரன் என்ற முறையிலும் முன் வைக்கிறேன்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.