மழைத்துளி சிப்பியில் விழுந்து முத்து வருவதில்லை! பின் முத்து எப்படி உருவாகிறது?

0 919

முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. தமிழகத்திலும் பண்டைய பாண்டிநாடுமுத்துக்களுக்குப் பெயர் பெற்றது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் முத்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது அறியப்பட்டுள்ளது. முத்து பொதுவாக ஒரு இரத்தினக் கல்லாகவே கருதி மதிக்கப்படுகிறது

முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன. முத்துக்களில் பின்வரும் வகைகள் உள்ளன:

அக்கோயா முத்து
தென்கடல் முத்து
தகித்தியன் முத்து
நன்னீர் முத்து

சிலவகைகள் அரிதாகவே கிடைக்கின்றன இதனால் அவற்றின் மதிப்பும் அதிகம்.

சிப்பிக்குள் மழைநீர் வீழ்ந்து, அதுதான் பின்னர் முத்தாக மாறுகிறது என்ற கருத்து பரப்பப்படுகிறது. கண்ணதாசன்கூட தனது கவிதை ஒன்றில் இப்படித்தான் எழுதினார். ஆனால், இக்கருத்து முற்றிலும் தவறானதாகும்.

முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழக் கூடியவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின் அடியில் மூழ்கிச் சென்றுதான் முத்து எடுக்கின்றனர். எனவே, முத்துச் சிப்பிக்குள் மழைத்துளி வீழ்வதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியிருக்க மழைத்துளிதான முத்தாக மாறுகிறது என்பது மடமை.

முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது.

மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது. மாறாக மழைத் துளியால் அல்ல.

19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இயற்கையாக உருவாகும் முத்துக்களே பயன்பட்டன. ஆட்கள் நீருக்குள் இறங்கி முத்துச்சிப்பிகளைச் சேகரிப்பார்கள். இது முத்துக்குளிப்பு எனப்பட்டது. இயற்கை முத்துக்கள் விளையும் இடமாகப் பண்டைக்காலத்திலேயே புகழ் பெற்றிருந்த இடங்கள் பலவுள்ளன. அரேபியக் குடா, இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பல்வேறு பசிபிக் தீவுகள், வெனிசுலா, மத்திய அமெரிக்கா ஆகியவற்றின் கரைகளை அண்டிய கடற் பகுதிகள் இவற்றுள் அடங்குவன.

தமிழ் நாட்டில், தூத்துக்குடி போன்ற கரையோர நகரங்கள் முத்துக்குளிப்புக்குப் பெயர் பெற்றிருந்தன. இலங்கையிலும், யாழ்ப்பாண அரசுக்குள் அடங்கியிருந்த மன்னார்க் குடாப் பகுதியில் முத்துக்குளிப்பு இடம் பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.