மருந்து உணவாகி போச்சு  மரணம் கூட பெயர் தெரியா  நோயாகி போச்சு – படிக்க தவறாதீர்கள்

527

தேவை ஒரு விவசாய புரட்சி-
கிராமங்கள் மெல்ல சாக
நகரங்கள் கொழுத்து வளர்கிறது

வற்றிய நீரோடையில்
தொண்டை வறண்டு நிற்கிறது கொக்கு

துள்ளி விளையாடிய மீன்கள்
அள்ளி போட ஆளில்லாமல்
அனாதை பிணங்களாய் வயல் வெளிகள்

வரப்புகளை இழந்து வேலிகளை எல்லையாக்கி
விலை பேசி விற்றபின் எங்கே விளையும் என்
முப்போக விளைச்சல்

காவிரி கரைகளை காணாமல்
கண்ணீர் வடிகிறது மழை துளிகள்

மரங்களை வளர்க்க மறந்ததால்
வளர்ந்த மரங்கள் மாடி கட்டடங்களில்
விழுந்து மரணிகிறது

மருந்து உணவாகி போச்சு
மரணம் கூட பெயர் தெரியா
நோயாகி போச்சு

ஆகமொத்தம் நம்ம விவசாயம்
எங்கோ போச்சு

செயற்கை உரங்கள் வேண்டாம் நம்ம
இயற்க்கை உரங்கள் போதும்

நகரங்கள் மீண்டும்
கிராமங்கலாய் மாற வேண்டும்

மரங்கள் மீண்டும் பச்சை வேர் விட வேண்டும்

உரம் போட்டு உருஞ்சபட்ட என்
மண்ணின் உயிர்
மீண்டும் விதைக்க பட வேண்டும்

விதை இல்லா மரம் வேண்டாம்
பூ இல்லா காய் வேண்டாம்
மனம் இல்லா மலர்கள் வேண்டாம்

ஆங்கில மருந்தால் மலட்டு தன்மை எய்திய
என் வீட்டு பசு மாடு மீண்டும் கற்பமாக வேண்டும்
என் வீட்டு காளை மாடு தந்தையாக வேண்டும்

அறிவியல் என்று சொல்லி அடித்த மருந்துகளால்
பறந்து போன பட்டம்பூச்சியும் இறந்து போன மண் புழுவும் மீண்டும் என் வயலுக்கு வர வேண்டும்

விவசாயம் ஏதோ என்று எண்ணிவிட வேண்டாம்
உனக்கான உயிர் அங்கேதான் பயிரிடபடுகிறது

எங்கேயோ தவறு தொடர்ந்துள்ளது அதை இப்போதே
திருத்தி ஆக வேண்டும்

இயற்க்கை வழி திரும்புவோம்
புதிய புரச்சி இங்கே இருந்து தொடங்கட்டும்

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.