மருத்துவ துறைக்கு பலியாடாகும் குழந்தைகள்..! சோதனை எலிகளா குழந்தைகள்..?

0 303

மருத்துவதுறையில் நடக்கும் அநியாயங்கள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை மருத்துவமனையின் பெயர் கெட்டுவிடும் என்று..!

மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும் மருத்துவமனைகள் அங்கு சொல்லும் நோயாளிகளை ஒரு சோதனை எலிகளாக பயன்படுத்தும் உண்டு..!

வேலுரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் (பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி மருத்துவ மனையின் பெயர் வெளியிடவில்லை) நேரடியாக தங்கள் குழந்தை பாதிக்கப்பட்டதை சற்று பொறுமையாக விளக்கினார்கள்..!

குழந்தையை அவர்கள் குழந்தை போலவே பார்க்கவில்லை ஏதோ சோதனை பொருட்கள் போல கையாண்டனர் என்று..! இதை எதிர்த்து எந்த ஒரு கேள்வியும் பெற்றோர்கள் மருத்துவமனைகளில் கேட்க முடிவதில்லை காரணம் குழந்தையின் உயிர்கள் மருத்துவர்களிடம் இருப்பதால்..!

மருத்துவதுறையிடம் எங்களது வேண்டுகோள் என்னவென்றால்..!

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் என்பது உங்களுக்கு மற்ற நோயாளிகளை போல இவர்களும் என்ற கண்ணோட்டமே பெரும்பாலும் உள்ளது..! ஒவ்வொரு நோயாளியின் பின்பு வெவ்வேறு குடும்பம் உள்ளது, என்பதை மறந்து விடாதீர்கள்

தயவு செய்து நோயாளிகளை கவனிக்காவிட்டாலாலும் வேறு மருத்துவர்களை அனுக சொல்லுங்கள் ஆனால் சோதனை எலிகளாக பயன்படுத்தாதிர்கள்..!

பெற்றோர், நோயாளிகளிடம் எங்கள் வேண்டுகோள் என்னவென்றால்

இந்த மருத்துவமனையில் பணம் அதிகம் வாங்குவார்கள் ஆகையால் மருத்துவம் நன்றாக இருக்கும் என்றும், இந்த மருத்துவமனையில் பணம் குறைவாக வாங்குவார்கள் ஆகையால் மருத்துவம் தரமில்லாதாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தை தவிருங்கள்..!

எந்த மருத்துவமனையில் நோயாளிகளை நோயாளிகள் போன்று கவனிக்கிறார்கள் என்று அறிந்து வைத்திருப்பது சிறந்தது..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.