மரங்களை எப்போது நடவேண்டும்..? எப்படி நட வேண்டும்..? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் எளிய செய்முறை…!

0 1,045

மரங்களை நடவு செய்ய ஜூலை- அக்டோபர் வரை சரியான காலமாக இருக்கும்..

அதற்கு நிலத்தை தற்சமயம் மே மாதங்களில் தயார் செய்ய வேண்டும்.. கீழ்கண்டவாறு மர கன்றுகளை நடவு செய்ய நிலத்தை தயார் செய்யலாம்..

2*2*2 நீள அகல ஆழத்தில் குழி எடுக்கலாம்.

மேலே உள்ள மண்ணை 1 அடி வரை எடுத்து தனியாக வைக்கலாம்.. நல்ல மேல்மண்.. மண்ணின் வண்ணமும் மேல்மண்ணின் பொலபொலப்பான மண் மாறும் போது மண் இறுக்கமாக இருக்கும்..

வண்ணமும் குறையும்.. இதற்கு கீழே உள்ள மண்ணை எடுத்து குழியை சுற்றி வரப்பு போல போட்டு மிதித்துவிடலாம்.. இறுதியாக மண்ணை நன்கு கொத்திவிட்டுவிட்டு ஓரிரு மாதம் மண்ணை ஆறவிடலாம்..

குறைந்தது ஒரு வாரமாவது மண்ணை ஆற விடலாம்.. மண் ஆறும்போது உள்ளே எரு அல்லது மட்கிய குப்பை கொஞ்சம் போட்டு விடலாம்..

பின் மரகன்று நடவு செய்யும்போது அந்த குப்பை மண்ணை கிளறி விட்டு இன்னும் கொஞ்சம் மண்ணை சேர்த்து கிளறலாம். மரக்கன்றை நட்டுவிட்டு மேல்மண்ணை எடுத்து சுற்றிலும் போட்டுவிடலாம்..

இடையிடையே நன்கு மட்கிய கழிவுகளை சிறிதளவு இடையிடையே தூவிவிடலாம்.. குழியை முழுவதுமாக மூடாமல் கொஞ்சம் பள்ளம் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்..

அதில் சுற்றிலும் இலைதழைகளை கொண்டு மூடாக்கு இடவும்.. மழை காலம் என்பதால் பராமரிப்பு பெரிதாக தேவை இருக்காது.. அடுத்து வறட்சி ஏற்படும்போது அல்லது செடி வாடும் போது மட்டும் தண்ணீர் கொடுக்கவும்..

அனுதினம் தண்ணீர் கொடுப்பதை தவிர்க்கவும்.. மூடாக்கு மட்டும் தீர தீர கொடுக்கவும்.. அவ்வளவு தான் செடி வளர வளர தண்ணீர் ஊற்றும் கால இடைவெளியை அதிகரிக்கவும்.. ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவும்..

இது எளிய முறை..
முயற்சி செய்யவும்..

நன்றி.. பரமு..????????

பகிருங்கள் பல மரங்கள் உருவாக நாமும் காரணமாக இருப்போம்…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.