மரக்கறி சாப்பிடுகிறீர்களா..? அதென்ன மரக்கறி அப்புடின்னு கேக்குறீங்களா..?

0 424

காய்கறி (மரக்கறி) எனப்படுவது மனிதர்களால் உணவாக உட்கொள்ளப்படும் எந்த ஒரு தாவரத்தின் பகுதியையும் குறிக்கும். ஆனால் இவற்றுள் பழங்கள், விதைகள், மூலிகைகள் போன்றவை அடங்காது.

சில காய்கறிகள் சமைக்காது பச்சையாகவே உண்ணப்படுகின்றன. நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் பச்சையாக உண்ணலாம். அதே வேளை சில சமைத்தே உண்ணப்படுகின்றன. சமைக்கும் போது அவற்றிலுள்ள இயற்கை நஞ்சு அழிவதுடன் நுண்ணுயிரிகளும் அழிகின்றன. ஆயினும் சமைப்பதால் காய்கறிகளிலுள்ள போசணைக் கூறுகள் அழிவுற வாய்ப்புள்ளது, சமைத்து உண்ணப்படும் காய்கறிகள்: கத்தரி, பழுக்காத தக்காளி, உருளைக் கிழங்கு, அவரைவகைகள்.

ஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்படுதல் நல்லது. அப்படி செய்வதால் இதய நோய்கள் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும்

காய்கறிகளில் பல வகைகள் உண்டு. இலை வகை, பூக்கள் வகை, வேர் வகை

வேர்சம்பந்தப்பட்ட காய்கறிகள்

மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும். அவைகளில், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, சர்க்கரை வள்ளி கிழங்கு, பூண்டு மற்றும் நூல்கோல் என பல வகைகள் உண்டு.
பச்சை

இலை காய்கறிகள்

நம் உடலுக்கு ஆன்டி-ஆக்சீன்ட்டுகளாக செயல்படும். இவ்வகையான காய்கறிகளில் நார்சத்தும். கரோட்டினாய்டுகளூம் வளமையாக உள்ளது..

பூக்கள் வகை காய்கறி

அதிகமான நார்ச்சத்து, குறைந்த கலோரிகள் மற்றும் வளமையான வைட்டமின்களை காணலாம். காலிப்பிளவர், தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றூம் பச்சைப்பூக்கோசு என பல வகையான பூக்கள் சம்பந்தப்பட்ட காய்கறிகள் உள்ளது.

விதை சம்பந்தப்பட்ட காய்கறிகள்

பட்டர் பீன்ஸ், கொத்தவரங்காய், உழுத்தம் பருப்பு, பாசிப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், பிஜியன் பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை அனைத்தும் விதை சம்பந்தப்பட்ட காய்கறி வகைகளே

You might also like

Leave A Reply

Your email address will not be published.