பெட்ரோல் டீசல் தெரிந்ததில் கொஞ்சமாவது நிலக்கரி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

0 194

நிலக்கரியின் மறு உண்மை !!!
இறந்து போன செடி,கொடி,தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பூமிக்கடியில் பல லட்சம் ஆண்டுகள் முன்னதாக புதையுற்று தற்போது நிலக்கரியாக கிடைக்கின்றது.
நிலக்கரி~கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கொண்டு உருவானது. இந்தியாவில் தமிழ்நாடு , பீகார், ஓரிசா,மேற்கு வங்கம் மாநிலத்தில் அதிகமாக வெட்டி எடுக்கப்படுகின்றது.

நிலக்கரி நன்மையை விட தீங்கு அதிகம். கார்பன் – டை- ஆக்ஸைட (co2), கார்பன் மோனாக்ஸைடு (co), சல்பர்- டை -ஆக்ஸைடு so2, நைட்ரஜன் ஆக்ஸைடு (NOx) பல வாயுக்கள் வெளிவருவதால் சுற்று சூழல் பாதிப்பும், காற்று மாசுபாடு ஏற்படுகின்றது.

இதனால் புற்றுநோய், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, சுவாசக்கோளாறு, சிறுநீரக பாதிப்பு பல பிரச்சனைகள் உருவாகின்றது. இதில் பயன்படுத்தும் நீரானது நச்சுக்கழிவு ஆக மாறி நிலத்தடி நீர் கெட்டு விடுகின்றது!!

இதனால் தாவரங்கள், விலங்குகள் பாதிக்கப்படுவதும் இல்லாமல் நிலத்தடி நீரை விவசாயம் செய்யவும் இயலாது. நீரை குடித்தால் நுரையீரல் பாதிப்பு , கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அதிகமான பள்ளம் மேல் பள்ளம் எடுத்து செல்வதால் நிலநடுக்கம் ஏற்பட்டால் நிலக்கரி சுரங்கம் அருகில் இருக்கும் ஊர்கள் புதைகொள்ளவும் வாய்ப்புண்டு!!!!

 நிலக்கரி என்பது கார்பன் வகையைச் சேர்ந்தது. நூற்றாண்டுகளுக்கு மேலாக மண்ணில் புதைந்திருக்கும் படிமங்களிலிருந்து கிடைக்கிறது. இது ஹைட்ரோ கார்பனால் ஆனது. மேலும் இதில் கந்தகம் உள்ளிட்ட பொருட்களும் இருக்கிறது.உலகின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதில் நிலக்கரியின் பங்கு இன்றியமையாதது. 10.1% மின்சாரத் தேவை இதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

அமெரிக்காவி1970-ம் ஆண்டு வெர்ஜீனியாவின் மிட்லோத்தியான் என்கிற இடத்தில் நிலக்கரி வெட்டி எடுப்பது தொடங்கப்பட்டது. உலகின் மொத்த உற்பத்தியில் 13% அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் மத்திய பகுதியிலும், ஸ்காட்லாந்து நாட்டின் தென்பகுதியிலும் அதிகமான நிலக்கரி சுரங்கங்கள் இருந்தன. ஸ்காட்லாந்து நாட்டின் தென் பகுதியில் இருந்த டவர் நிலக்கரி சுரங்கமே நீண்டகாலமாக இயங்கிய சுரங்கமாகும். 1805-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுரங்கம் 2008-ம் ஆண்டு மூடப்பட்டது.

18-ம் நூற்றாண்டில் தொழிற்புரட்சிக்கு பிறகே நிலக்கரியின் தேவை அதிகமாக இருந்தது. நீராவி இயந்திரங்களை இயக்க நிலக்கரி மிக அவசியமானதாக இருந்தது.

ரயில் மற்றும் கப்பல்களும் நீராவி இன்ஜின்கள் மூலமே இயக்கப்பட்டன. அன்றைய நாளில் மரக்கரியின் விலையை விட நிலக்கரியின் விலை மிகவும் குறைவாக இருந்ததும் அதிகம் பயன்படுத்த காரணமாக இருந்தது.

1880களில் நிலக்கரியை வெட்டி எடுக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இதற்கு முன்னர் மண்வெட்டி போன்ற கருவிகளையே பயன்படுத்தினர்.

 உலகின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 47% சீனா மட்டுமே உற்பத்தி செய்கிறது. உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் சீனா, இறக்குமதியிலும் முதல் இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 289 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. 80% மின்சார உற்பத்திக்கு நிலக்கரியை பயன்படுத்துகிறது.

உலகிலேயே மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமெரிக்காவில் உள்ளது. 1983-ம் ஆண்டு துவங்கப்பட்ட நார்த் ஆண்ட்லோப் ரோச்செல்லே (North Antelope Rochelle) என்று அழைக்கப்படும் இந்த நிலக்கரி சுரங்கம் வியாமிங் மாகாணத்தில் உள்ளது. 2.3 பில்லியன் டன் நிலக்கரி இதில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

லிக்னைல்லது பழுப்பு நிலக்கரி மற்றும் சப் பிட்மினஸ் ஆகியவற்றில் கார்பனின் அளவு குறைவாக இருப்பதால் இவற்றின் தரம் குறைவுதான். மிக உயர்ந்த தரத்தில் இருப்பது ஆந்த்ரசைட் மற்றும் பிட்மினஸ். இவை இரண்டிலுமே கார்பனின் அளவு அதிகம். இந்தியாவில் ஆந்த்ரசைட், பிட்மினஸ், லிக்னைட், பீட் ஆகிய நான்கு வகைகள் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் லிக்னைட் எனப்படும் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.

உத்தேசமாக நாட்டின் 37% மின்சாரத் தேவை நிலக்கரி மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது.

 நிலக்க ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது இந்தோனேஷியா. மொத்த உற்பத்தியில் 309 மில்லியன் டன் ஏற்றுமதி செய்கிறது.

 நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலியா தனது மொத்த உற்பத்தியில் 90 சதவீத நிலக்கரியை ஏற்றுமதி செய்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.