புகைப்பிடிக்கும் ஆட்களுக்கு ஒரு சிறு ஆறுதல் விருப்பம் இருந்தால் படியுங்கள்…!

0 515

இன்றைய காலத்தில் அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடும் முன்பு, அதிகமான அளவு உண்ணக்கூடாது என்பதற்காக சூப்பை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

ஏனெனில் அதை சாப்பிட்டால், பாதி வயிறு நிறைந்துவிடும். மேலும் சூப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் ஏதேனும் குளிர் காலம், மழைக் காலம் என்றால் போதும், அந்த நேரத்தில் அடிக்கடி சூப் சாப்பிட வேண்டும் என்பது போல் தோன்றும்.

அவ்வாறு சாப்பிடும் சூப்பில் தக்காளி சூப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதனை குடிப்பதால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும். சொல்லப்போனால் இது ஒரு சிறந்த டயட் மேற்கொள்ளும் போது உடலில் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ற பொருள்.

அது எப்படியென்று கேட்கிறீர்களா? சரி, இப்போது அதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளங்கள்…

* உடல் எடையை குறைக்க சிறந்த பொருளான இந்த தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியுன் அளவை கரைத்துவிடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. அதிலும் இந்த தக்காளியை ஆலிவ் ஆயிலுடன் சூப் செய்து சாப்பிட்டால், ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும், டயட்டிற்கு டயட் ஆகவும் இருக்கும். மேலும் தக்காளியில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். ஆகவே எடை எளிதில் குறையும்.

* இந்த சூப் சிவப்பு நிறத்தில் இருக்கும் தக்காளியால் செய்யப்படுவதால், புற்றுநோய்க்கு சிறந்தது. ஏனெனில் தக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதனை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வந்தால், மார்பக புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

* உடலில் உள்ள அதிகமாக இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள், உடலில் சேராமல் தடுக்கும் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படுவதையும் குறைக்கும். அதனால் இதயத்தில் ஏற்படும் இதய நோய்கள், கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இந்த தக்காளியில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. ஆகவே தக்காளி சூப்பை குடிப்பது நல்லது.

* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் இருப்பவர்கள், நீண்ட நாட்கள் ஆரோகக்கியமாக வாழ தக்காளி சூப்பை குடித்தால், உடலில் புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். அதுவும் தினமும் ஒரு பௌல் தக்காளி சூப்பை குடிப்பது நல்லது. ஏனெனில் அதில் உள்ள சத்துக்கள், புகை பிடிப்பதால் உடலை அழிக்கும் பொருளான கார்சினோஜென்னின் சக்தியை குறைத்துவிடுகிறது.

* தினமும் தக்காளி சூப்பை குடித்து வந்தால், சருமம் நன்கு அழகாக, பட்டுப் போன்றும், முகப்பரு மற்றும் சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறம் நீங்கிவிடும். அழகை மட்டும் பெறாமல், அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே எலும்புகள், பற்கள் மற்றும் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது.

எனவே, தக்காளி சூப் நல்லதா கெட்டதா என்று நினைத்து எதற்கும் பயப்படாமல், இனிமேல் சந்தோஷமாக விரும்பி குடித்து வாருங்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகும் பெறும்.

மேலும் ஒரு முக்கிய செய்தி.?! ..

தினமும் ஒரு தக்காளி சூப் போதும் ஆண்மையை அதிகரிக்க அற்புத மருந்து

லண்டன்: ஆண்மையை அதிகரிக்கும் சக்தி தக்காளியில் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிரிட்டன் போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தக்காளி குறித்து ஓர் ஆய்வு நடத்தினர். தக்காளி, ஆண்மையை அதிகரிப்பதாக அதில் தகவல் வெளியாகியுள்ளது.

தினமும் ஒரு தக்காளி சூப் குடித்தால் போதும். ஆண்களுக்கு வீரியத் தன்மை அதிகரிக்கிறது. விந்துவில் உயிரணுக்கள் குறைபாடே குழந்தை இன்மைக்கு காரணம். இதை தடுக்க சிறந்த மருந்து தக்காளிதான். தினமும் தக்காளி சூப் சாப்பிட்டால், இந்த குறைபாடு நீங்கிவிடும். தக்காளியில் உள்ள “லைகோபின்’ தான் சிவப்பு நிறத்தை தருகிறது. இந்த சிவப்பில்தான் வீரியம் நிறைந்திருக்கிறது. கொய்யா, பப்பாளியிலும் லைகோபின் உள்ளது. இரண்டு வாரம் தொடர்ந்து தக்காளி சூப் குடித்தால், ஆண்களின் வீரிய சக்தியில் லைகோபினின் அளவு 7ல் இருந்து 12 சதவீதமாக அதிகரிகிறது. குழந்தையின்மை குறைபாட்டை போக்க தக்காளியும் உதவும். ரி, தக்காளி சூப் எப்படி செய்வது என்று பார்போம்.

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி – 5
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
சோள மாவு – 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.

5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.