பிளட் பிரசர் உள்ளவருக்கு ஏற்ற உணவுகள் எவை..? ரத்த அழுத்தத்தில் இரு வகை உண்டு.

0 401

ரத்த அழுத்தத்தில் இரு வகை உண்டு.

இதயத்தில் இருந்து ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு அனுப்ப அதிக சிரமப்பட்டால் அது உயர் ரத்தம். அதே போன்று இந்த செயல்பாடு தாமதமானால் குறைந்த ரத்த அழுத்தமாம். ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். இதன் அளவு உயர்ந்தாலோ குறைந்தாலோ உடல் நிலை சீராக இல்லையென அர்த்தம்.

இரத்த அழுத்தத்தை உணவுகளாகும் கட்டுபடுத்த முடியும்

வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் எ, பி1, சி போன்றவை இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள Bromelain என்ற நொதி இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்டவற்றில் இருந்துகாக்கும்.

திராட்சை:
திராட்சையில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். ரத்த நாளங்களை அழுத்தமின்றி செயல்படச்செய்யும்.

பூண்டு:
பூண்டு கொலஸ்டரோலை கட்டுக்குள் வைப்பது மட்டுமன்றி, இதில் உள்ள அல்லிசின் என்ற மூலப்பொருள் ரத்த அழுத்தத்தை சமமான அளவில் வைக்க உதவும். தினமும் 2 பல் பூண்டை தேனில் கலந்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் கூடும்.

தர்பூசணி:
தர்பூசணியில் உள்ள Arginine, citrulline ஆகிய அமினோ அமிலங்கள் ரத்த நாளங்களின் செயல்பாட்டை அதிகரித்து ரத்தத்தை இதயத்திற்கு சீரான முறையில் அனுப்பச் செய்யும். தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறையுமாம்.

இளநீர்:
இளநீரில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி, கால்சியம், சோடியம் உள்ளிட்டவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து கொள்ளும். உயர் ரத்தம் கொண்டவர்கள் இளநீரை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

மாதுளை:
மாதுளை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பை தடுக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.