பாரம்பரிய முறையில் விதைகளை பகிர்ந்தால் 12 ஆண்டு சிறை, ரூ.1.5 கோடி அபராதம்!

0 246

பாரம்பரிய முறைப்படி விதைகளை பகிர்ந்துக் கொண்டால் சிறை தண்டனையை எதிர்கொள்ளும் நிலைக்கு டான்சானிய விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாய உற்பத்தியில் ஈடுபடும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கும் வகையில் டான்சானிய அரசு புதிய சட்டத்தை கடந்த டிசம்பரில் இயற்றியுள்ளது. இதன்படி காப்புரிமைப் பெறப்பட்ட விதைகள் பரிமாற்றத்திற்கு முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விதைகள் பகிர்வானது 80 விழுக்காடு அளவுக்கு பாரம்பரிய முறைப்படி, தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் தங்களுக்குள் பகிர்ந்துக் கொள்ளும் முறைப்படியே டான்சானியாவில் நடைபெற்று வருகிறது. இதனை தடை செய்வதன் மூலம் டான்சான்யாவின் கிராமப்புற பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும் என பாரம்பரிய விதை பாதுகாப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

“புதிய சட்டத்திற்கு உட்பட்டு நீங்கள் மான்சாண்டோ அல்லது சிங்கெண்டா நிறுவனங்களிடம் இருந்து விதைகள் வாங்குவீர்களேயானால் அதன் அறிவுசார் சொத்துரிமையை அந்நிறுவனங்கள் தக்க வைத்துக் கொள்ளும். ஒருமுறை வாங்கும் விதைகளை நீங்கள் எடுத்துவைத்து, பின்னர் மீண்டும் பயன்படுத்தும் போது, உங்களது நிலத்தில் வர்த்தகமற்ற பயன்பாட்டுக்கு மட்டுமே அதை பயன்படுத்த முடியும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ, உறவினர்களுக்கோ விதைகளை பகிர்வது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக ஆப்ரிக்காவின் பெரும்பான்மை மக்கள் பாரம்பரிய முறைப்படியே விதைகளை பகிர்ந்து வருகின்றனர். இதனை அரசு சட்டவிரோதமாக்கியுள்ளது” என்கின்றனர் விதை பாதுகாப்பு அமைப்பினர்.

புதிய சட்டவிதியின்படி, பாரம்பரிய முறைப்படி விதைகளை பகிர்ந்தால் டான்சானிய விவசாயிகள் 12 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்கவோ அல்லது, 2 லட்சத்து 5,300 பவுண்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான சம்பளத்தை பெறும் டான்சானிய விவசாயிகளுக்கு இந்த அபராதத்தொகை கனவில் கூட காண இயலாதது.
சர்வதேச ஊடகங்களில் இச்செய்தி பெரிய இடத்தை பெறாவிட்டாலும், உணவுரிமைக்காக போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இது குறித்த செய்திகளை சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாக பகிர்ந்து வருகின்றனர்

(மண்வாசனை, விவசாயத்தை காப்போம் )பக்கத்தை பின் தொடருங்கள் இனி ஒவ்வொரு விதைகளையும் சேகரிக்கும் முறைகளை இதேபோல் எழுத்து வடிவில் பதிவிடுகிறோம்..!மீம்ஸ் முலம் முழுவதையும் பதிவிட முடியாது என்பதாலே இந்த முயற்சி..!

ஒருவேளை முகநூலில் பார்க்க இயலாதவர்கள் தினம் தினம் பதிவேற்றப்படும் செய்திகளை vivasayathaikappom.com  என்ற தளத்திலும் சென்று பார்க்கலாம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.