பாதிரியார்கள் முதல் பாதாளம் வரை எலும்பு பிசினஸ்..!

0 160

சென்னை: பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்ல பின்புறத்தில் உள்ள பிணவறை உள்ளது. இந்த பிணவறை 20 அடி நீளமும், 40 அடி அகலமும், 30 அடி ஆழமும் கொண்டது. இந்த பிணவறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய அறைகள் உள்ளது. சடலத்தை முழுவதுமாக துணியால் சுத்தப்பட்டு கெமிக்கல் கலந்து பிணவறையில் உள்ள அறையில் மூடப்படும். அதன் பிறகு, சில மாதங்கள் கழித்து அந்த சடலத்தின் தோல், சதை உள்ளிட்டவை உலர்ந்து எலும்பு கூடு மட்டும் 30 அடி ஆழத்தில் உள்ள பெட்டியில் விழும் வகையில் வடிவமைக்கப்படைடுள்ளது. இதனால், எந்த கிளையில் முதியோர்கள் உயிரிழந்தாலும் பாலேஸ்வரம் கிளைக்கு கொண்டு வந்து சடலத்தை அடக்கம் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. வெளிநாட்டில் இருப்பவர்களிடம் நிதிகளை பெறுவதற்காக எலும்புகளை சேமித்து வைப்பதகாக கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதி மக்கள், எலும்பு, உடல் உறுப்புகளை பல லட்சத்திற்கு விற்பனை செய்வதற்காக கருணை இல்லம் நிர்வாகிகள் இது போன்ற வடிவமைப்பை செய்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.

மாநிலம் முழுவதும் விசாரணை: பாலேஸ்வரம் கருணை இல்லத்தை தவிர திண்டுக்கல், தாம்பரம் அடுத்த இரும்புலியூர், வேலூர் மாவட்டம் திருவலம், விழுப்புரம் மாவட்டத்தில் புளிச்சபள்ளம் ஆகிய இடங்களில் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த கருணை இல்லத்திலேயும் நூற்றுக்கணக்கான முதியோர் தங்கி வருகின்றனர். அவர்களின் நிலை குறித்து ஆய்வு நடத்துவார்களா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிருபர்களிடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராஜ் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டி கிராமம் என்னுடைய சொந்த ஊர். முருகன், புருசோத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கருணை இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி எங்களை அழைத்து வந்தனர். கொஞ்சம் நேரம் கழித்து தான் தெரிந்தது எங்களுக்கு அருகில் பிணம் இருப்பது. நான் மயக்கம் அடைந்துவிட்டேன். அன்னம்மாள் கதவை தட்டி ஆம்புலன்ஸை நிறுத்த சொன்னார். ஆனால், ஆம்புலன்ஸ் நிறுத்தவில்லை. நான் மயக்கம் தெளிந்து எழுந்ததும் காவல் நிலையத்தில் இருந்தேன். தண்ணீரும், உணவும் கொடுக்கதாதால் மயக்கம் அடைந்தேன் என்றார்.மர்மமான கருணை இல்லம்: பாலேஸ்வரம் கிராம மக்கள் கூறுகையில், இரவு நேரங்களில் கருணை இல்லத்தில் இருப்பவர்கள் அதிகம் கூச்சலிடுகின்றனர். பல இரவுகளில் அழு குரல்கள் கேட்கும். இந்த கருணை இல்லத்திற்கு வெளியாட்கள் யாரையாவது கொண்டு சென்றால் 3 அல்லது 4 நாட்களில் உயரிழந்து விடுகின்றனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் இந்த கருணை இல்லத்தில் 40க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ்களையும் கூட பெறவில்லை. இவ்வளவு பேர் அடுத்தடுத்து இறந்தும் அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. கருணை இல்லம் மர்ம இல்லமாகவே உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணையை நடத்தி கருணை இல்லத்தில் மீதமுள்ளவர்களை மீட்க வேண்டும். லைசன்ஸ் இல்லாமல் செயல்படும் கருணை இல்லத்திற்கு சீல் வைக்க வேண்டும். கருணை இல்லத்தின் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கருணை இல்லம் தொடர்பாக பல புகார்கள் அளித்தும் சாலவாக்கம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

யாருக்கும் அனுமதியில்லை: கருணை இல்லத்தை சுற்றியுள்ள பகுதியில் முதியவர்கள் காணாமல் போனால் அவர்கள் குறித்து கேட்டறிய உறவினர்கள் கருணை இல்லத்திற்கு சென்று கேட்பார்கள். ஆனால், வெளியாட்கள் யாரையும் அனுமதிக்காமல் நிர்வாகிகள் ரகசியம் காத்து வந்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.