பள்ளி கல்லூரி காலங்களில் பெண்களின் உள்ளாடை தவறுதலாக விலகியிருந்தாலும் அதை நண்பர்களிடம் கூப்பிட்டு காட்டி நகைத்த ஒரு சாதாரண இளைஞன் தான் இவன்..!

0 653

இன்று வாழ்க்கையில் மாற்றம் துவங்க துவங்க தெரிகிறது வாழ்க்கையில் எவ்வளவு கேவலமாக கடந்து வந்துள்ளோம் என்று..!

சில பிரச்சினைகள், சம்பவங்களில் பள்ளி கல்லூரி காலங்களில் ஈடுபடும் போது ஆசிரியர்கள் பெரிதாக கூறும் வார்த்தை கண்டிப்பாக இத நினச்சி எதிர்காலத்தில வருத்தபடுவட என்று..! அன்று அவர்கள் கூறுகையில் நக்கலடித்த நான் இன்று அதை மறுக்க போவதில்லை..

வாழ்க்கையில் பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்று மாதம் 50ஆயிரம் ஊதியம் பெறும் போதும் தோன்றுகின்றது..!

எந்த பெண்களையெல்லாம் நகைத்தேனோ அவர்களெல்லாம் இன்று முகம் மலர்ந்து என்னிடம் பேசும் போது என் முகம் அந்த முகங்களை பார்க்க தகுதியற்றவனாய் தோன்றுகிறது…!

பெரும்பாலும் பெண்களை நகைத்து பழகிய என் வாழ்க்கையில் இன்று சாலையில் கண்ட ஒரு பெண்ணை நினைத்து ஒரு கணம் கண்ணில் நீர் எட்டி பார்த்தது..!

இளம்வயது உடைய இளஞ்சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு அவலட்சணமான அவளின் தோற்றம் உடனே என் மீது நீங்கள் கோபப்பட வாய்ப்பு உள்ளது எப்படி அவலட்சணமான என்று ஆம் முக அழகை கூட்டும் முடி அதாவது கூந்தலானது அந்த பெண்ணிற்கு இல்லை , பார்க்கும்போது போதே தெரிந்தது பொருளாதார பின் தங்கிய நிலை என்று..!

காரணம் படிக்கும் வயது ஆனால் தலையில் வெள்ளரி கூடை..! அந்த பெண் படிப்பை நிறுத்தியதற்கு என் கடந்த காலம் நினைவுக்கு வந்தது..! குறையில்லாமல் இருக்கும் பெண்களையே கேலி செய்யும் போது இதுபோன்ற பொண்களை விட்டா வைத்திருப்பார்கள் என்று..!

இத்தனையும் 30 விநாடிகளில் நினைத்து அந்த பெண் அருகில் சென்று வெள்ளரி வாங்க சென்றேன் கூறு பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று கூற நாற்பது ரூபாய்க்கு வெள்ளரி வாங்கினேன்…!

அந்த பெண்ணின் கண்களில் மகிழ்ச்சி தோன்றியதே தவிர மனதில் இல்லை..!

காரணம் கேட்கையில் தம்பி பள்ளிக்கூடத்தில படிக்குறான் அப்பா மதுவுக்கு அடிமையாகி இறந்துவிட்டார் அம்மா பக்கத்து சந்துல வெள்ளரி விற்கிறாங்க என்றால்..!

100 ரூபாய்க்கு வெள்ளரி வாங்கிட்டு வந்தா 200 ரூபாய் வரை விற்கலாம் ஆனா அதுல சில பேரு 10 ரூபாய் குறைச்சா வாங்கிறேன்னு சொல்லுவாங்க வேர வலியே இல்லாம குறச்சி கொடுப்போம் என்றால்..!

ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் என்று கேட்டபோது அம்மா எப்புடியும் ₹100ரூபாய் லாபம் பார்ப்ங்க ஆனா என்னலா ₹50,₹60தான் பாக்க முடியும் என்றால், காரணம் அம்மாகிட்ட யாரும் பேரம் பேசுனா அம்மா கட்டாதுன்னு சொல்லிடுவாங்க ஆனா என்னாலே அப்படி சொல்ல முடியல என்றாள்..!

தம்பியின் படிப்பு செலவை பார்த்துக்கிறேன் நீ தம்பிய நல்லா படிக்க சொல்லு என்னும் போது அவள் மனம் மகிழ்ந்தது..

அப்போது கையில் இருந்த பணத்தையும், தொடர்பு எண்ணையும் கொடுத்து விட்டு வந்தேன்

இயற்கையின் படைப்பில் தவறுதலாக சில பிழைகள் நேரும் போது யார் தான் பொறுப்பேற்பது என்று தான் இன்று வரை புரியவில்லை..!.

வழிப்போக்கன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.