பல ஆண்டுகளுக்கு முன் நானும் இந்த ஹோட்டலில் சாப்பிட்ட அனுபவம் உண்டு

0 526

கன்னியாகுமரி மாவட்டம்
அழகியபாண்டியபுரம் என்கிற ஊர்ல ஷபி ரெஸ்டாரன்ட் அப்படிங்கிற சின்ன ஹோட்டல்..

இன்று அதிகாலையில் கையில் தூக்கு வாளியுடன் 10 வயது சின்ன பையன் ஒருவன்,
“அண்ணே…! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க…! காசு நாளைக்கு தருவாங்களாம்” என்றான்…

ஹோட்டல் நடத்துபவரோ, “ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு…. அம்மாக்கிட்டே சொல்லுமா…. இப்போ வாங்கிட்டுப்போ… தூக்கு வாளியை தா, சாம்பார் ஊத்தித் தாரேன்’ என்றார் …

இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.

குழந்தை, “சரி… அம்மாட்ட சொல்றேன்… போயிட்டு வரேன் அண்ணே…. ” என்றபடியே குழந்தை கிளம்பிவிட்டான்.

அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்… “நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க….?”

ஹோட்டல் முதலாளி, “அட சாப்பாடு தானே சார்…. நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.
இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்… அதெல்லாம் குடுத்துடுவாங்க..என்ன கொஞ்சம் லேட் ஆகும்…. எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது..?

குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார், அந்த அம்மா அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன், அப்படிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்….

நான் உழைச்சி தான் சம்பாதிக்கிற காசு …வந்துடும் சார்….ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்”.

நான் உணவு தரவில்லை என்றால் , அந்த குழந்தை , #தன் #தாய்க்காகத் #திருடப் #போவான். அல்லது #அந்தத் #தாய், #தன் #குழந்தையின் #பசிக்காக, #தவறான #பாதைக்கு #செல்வாள் …

ஆனால், என்னால் _ நான் நஷ்டபட்டாலும், இப்பொழுது நம் சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு தவறுகளை தடுக்க முடிந்திருக்கிறது” என்றார்…

இதை கேட்ட எனக்கோ கொஞ்சம் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது…

இந்த வினாடியிலிருந்து நாமும்
பிறருக்கு இனி ஏதாவது உதவி செய்யனும் என்ற எண்ணத்துடன்
நானும் நகர்ந்தேன்…

இனி….நீங்களும்….

(இது முகலூலில் இன்று வந்த பதிவு….பல ஆண்டுகளுக்கு முன் நானும் இந்த ஹோட்டலில் சாப்பிட்ட அனுபவம் உண்டு.)

You might also like

Leave A Reply

Your email address will not be published.