பயந்து பயந்து கொடுக்க விஷமா கொடுக்றோம்”..?

0 569

” உலக தாய்ப்பால் தினம்..”

தாய்ப்பால் நல்லது தான் சரி எத்தன பேர் சரியாவும் ஔிவுமறைவுக்காக பயந்தும் கொடுக்றோம்..

அதுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்காம தாய்ப்பால் தினம் கொண்டாடுறது எப்படி சரியா இருக்கும்..
குழந்தை பிறந்து இரண்டு வருஷத்துக்கு வெளிய எங்கயும் போமுடியாது..

பச்ச பிள்ளை பால் குடுக்கனா நடுரோட்லயா உக்காருவா அமைதியா வீட்ல இருனு சொல்லுவாங்க..

பழைய பதிவு ஒன்னு இருக்கு ..
பல அலுவங்கங்களேயே
இப்போ தான் சரியான விடுமுறை கொடுக்றான்..
எனக்கு தெரிஞ்சு இரண்டு நாட்ல..
குழந்தை பிறந்து ஆறு மாசம் அம்மா,அப்பா ரெண்டு பேர்க்கும் விடுமுறை தராங்களான்..

தாய்ப்பால் கட்டாயம் இல்ல..அது அவங்க அவங்க தனிப்பட்ட விஷியம் ஆனா இப்போ வர ஒரு வீட்ல குழந்தை பிறந்துருக்குனா யாரோ போகும்போது பயந்துதான் போறோம்..அய்யோ சாப்பாடு கொடுக்கும்போத உள்ள போய் எதும் நினைச்சுப்பாங்களேனு ..

வெளில போறத கூட இத யோசிக்குறோம்.. இதுக்குனு எங்க போய் நிக்க .
எவ்ளோவோ பிரச்சனை இதையும் பேசுவோம்..

என்ன பண்ண..இது அடுத்தவனுக்கு பயந்து ஔியனுமே..வெளி இடத்துல தாய்ப் பால் கொடுக்க..

பலநாடுகள இத வெளிப்படையா பன்னாலும் இந்தியா மாதிரி இடத்துல எங்கயாது உக்காந்து தாய்ப்பால் கொடுத்தா சுத்தி கூட்டமே கூடிறாங்க…
ஏதோ காணதாத பாக்றமாதிரி..

ஔிஞ்சு ஔிஞ்சு ஒர கண்ணால பாக்ற நாய்ங்க இருக்காங்க..ஏன்னா இழுத்து மூடி சேலை கட்டினாலும் ,வெஸ்டர்ன் ஆடை போட்ருந்தாலும் நீ பொண்ணுனு பேய் மாதிரி பாக்குறவங்க இருக்காங்க..அதுலயும் இழுத்து மூடுன சேலைல அவங்க கண்ணு என்ன தேடுதுனு தெரியாது..

தாய்ப்பால் அவங்க அவங்க தனிமனித உரிமை சார்ந்த விஷியம்..
அத உறுப்பு ரீதியா கொச்சை படுததி வைச்சுருக்கோம்..அதான் வெளி இடத்துல தைரியமா துணிஞ்சு பண்ணமுடியல..

குழந்தை பசில காட்டு கத்து கத்துனாலும்…,தனக்கே பால் கட்டினாலும் இருக்குற இடத்துக்கு பயந்து ஔியுறவங்க அதிகமா இருக்கோம்..

நமக்கான ஒன்னா எல்லாத்தையும் மாற்றுறதுதானா இங்க வெற்றி..
பயந்து ,ஔியுறது சரியில்ல

“பாலூட்டும் அறைக்கு வேலை இல்ல..
துணி போட்டு மறைச்சு எவ்ளோநாள் கொடுக்க
இடம் பாத்து அலைஞ்சே வலி வந்துரும் போல
ஔிவு மறைவு உடம்ப பாத்துற கூடாதுனு..
பயந்து பயந்து கொடுக்க விஷமா கொடுக்றோம்”

முதலில் எப்படி செயல் படுறோம்னு பாத்துட்டு இதுக்கான நாள அங்கீகரிக்கலாம்..

மறைக்க விஷமோ.,போதைப்பொருளோ இல்லை…

மாற்றங்கள் வேண்டி..

பி.கு இது என் தனிப்பட்ட கருத்து யாரையும் புண்படுத்த அல்ல…

பதிவு :மானிதி தெரசா

You might also like

Leave A Reply

Your email address will not be published.