பனைக்கு ஈடான மருத மரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா..? கொஞ்சம் இத பத்தி தெரிஞ்சுக்கோங்க..!

0 1,581

மருதம் பூ

மருதம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.

சங்க காலத்தில் மருதம்

சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர்.

மருத மரம் ஆற்றோரங்களிலும் வயலோரங்களிலும் செழித்து வளரும்.

மருத மரத்தில் வெண்மருது கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு. பில்லமருது வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.

மரத்தின் உட்புறம் சிவப்பு.
உதிர்ந்த பூவும் சிவப்பு.
மருத மரம் செழுமையான நிழலைத் தரும்.

உழவர்க்கு நிழல்

நெல்லை விடியலில் போரடித்த உழவர் நண்பகலில் மருதமர நிழலில் எருதுகளுடன் இளைப்பாறுவார்களாம்.

நாகதெய்வக் கோயில்

மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது.

மதுரை

மதுரை என்னும் ஊர்ப்பெயர் மருதத்துறை > மதுரை எனக் கொள்ளும் அளவுக்கு வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி.

காவிரியாற்று ஆர்க்காடு

அரசன் சேந்தனின் தந்தை அழிசி. அவனது ஊர் ஆர்க்காட்டின் காவிரித் துறையில் மருத மரங்கள் மிகுதி.

மருத வேலி

புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரைப் பகுதிக்கு ‘நெய்லங்கானல்’ என்னும் பெயர் உண்டு. அங்கிருந்த தாமரைப் பொய்கைக்கு கைதைமரம் வேலியாக அமைந்திருந்ததாம். இது மதுரையிலிருந்த தாமரைக் குளத்துக்கு மருதமரம் வேலியாக அமைந்திருந்தது போல அமைந்திருந்த்தாம்.

மருத மாலை

திருபரங்குன்றத்தைத் தொழ வந்த சூரர மகளிர் தலையில் சண்பகப் பூவையும், மார்பில் மருத மர மலர்களை இலைகளோடு சேர்த்துக் கட்டிய மாலையையும் அணிந்திருந்தார்களாம்.

நன்மைகள்

ஆஸ்துமா பிரச்சனையை தீர்க்க இந்த அர்ஜூனா மரம் மிகவும் உதவியாக இருக்கிறது. ஆஸ்துமா இயற்கை சிகிச்சையின் ஒரு பகுதியாக, அர்ஜூனா மரத்தின் பட்டையை தூள் செய்து சூடான தண்ணீர் அல்லது பாலில் கலந்து தேநீர் வடிவில் உட்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வாக இருக்கும்.

அர்ஜூனா மரத்தின் பட்டையில் அதிகமான நோயெதிர்ப்பு சக்தி அடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, தோல்களுக்கு இந்த மரத்தின் பட்டை மிகவும் உதவியாக இருக்கிறது.

சிறுநீரகத்தில் உருவான கல் கரைய , அர்ஜூனா பட்டையை நன்கு வேகவைத்து வடிக்கட்டி பருக வேண்டும் . இவ்வாறு செய்தால் சிறுநீரகத்தில் உள்ள கல் சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.

இந்த அர்ஜூனா பட்டை மூலம் இதய நோய் வருவதையும் தடுக்கலாம்.

அர்ஜூனா பட்டயை தேநீராக குடிக்கும் போது உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.