பணக்காரர் ஆக வேண்டுமென்றால், நீங்கள் செய்யக் கூடாத விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

0 793

ஆடம்பரமான வாழ்க்கை வாழ்தல்: பொதுவாக நம்பப்படுவதற்கு எதிராக, பணக்காரர்கள் மிகவும் சிக்கனமான வாழ்க்கை நடத்துகிறார்கள். ஒவ்வொரு ரூபாயையும் கவனமாக செலவு செய்கிறார்கள்.

Millionaire next door , அடுத்த வீட்டு பணக்காரர் என்ற பிரபல தனிநபர் நிதி புத்தகத்தில், அமெரிக்காவில் கோடீஸ்வரர்களின் வாழ்க்கை முறையை பற்றி எழுதியுள்ளார்கள். ஒரு பெரிய கோடீஸ்வரர் வாழ்க்கையில் அதிகமாக செலவழித்த ஒரே விஷயம், தனது கல்யாணத்திற்காக ஒரு கோட் சூட் வாங்கியது தான். அந்தக் கோட் சூட்டின் விலை 150 டாலர் மட்டுமே. அன்றைய காலத்தில் நமது ஊர் மதிப்பின்படி, ரூபாய் 5000 மட்டுமே. இவ்வாறு சிக்கனமாக வாழ்வதன் மூலமே அவர்கள் பணக்காரர்களாக ஆகிறார்கள்.

கடனில் மாட்டிக் கொள்ளுதல்: கடனில் இருந்து கொண்டே பணக்காரர் ஆவது என்பது முடியாத காரியம். பணக்காரர்கள் கடன் வாங்குவதை தவிர்க்கிறார்கள். தொழில் சம்பந்தமாக சில சமயம் கடன் வாங்கலாம். அவற்றில் கூட எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் போது தான், தொழில் சார்ந்த கடன் வாங்குவார்கள். அதனைக்கூட தவிர்க்கப் பார்ப்பார்கள். அமெரிக்காவில் லி மே(Lee May) என்ற பணக்காரர் , தொன்மையான மகிழ்வுந்துகளை சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் 5000 மகிழுந்துகளுக்கும் மேலாக சேகரித்துள்ளார். அவர் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளார். இவ்வளவு மகிழுந்துகளை வாங்கி அவர் ஒன்றே ஒன்றை மட்டுமே கடன் வாங்கி வாங்கியுள்ளார். இதன் மூலம் பணக்காரர்கள் எவ்வாறு கடன்களை தவிர்க்கிறார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

பணத்தை தேங்க விடுதல்: பணக்காரர்கள் பணத்தை தேங்க விடுவதில்லை. ஒவ்வொரு ரூபாய்க்கும் ஏதாவது ஒரு வேலை கொடுக்கிறார்கள். எங்கேயாவது அதை முதலீடு செய்வார்கள். அந்தப் பணத்தைப் பெருக்க பார்ப்பார்கள்.

பெற்றோர்களை நிதிக்காக சார்ந்து இருத்தல்: முதல் தலைமுறை பணக்காரர்கள், பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர்களின் நிதியை சார்ந்திருப்பதில்லை. தங்கள் சொந்தக்காலில் சொந்த முயற்சியில் பணக்காரராக உழைக்கிறார்கள். வெற்றியோ தோல்வியோ தங்கள் முடிவை தாங்களே எடுத்து , விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாதிருத்தல்:பணக்காரர்கள் எப்போதும் வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை நன்றாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். வாய்ப்புகளில் இருக்கும் அபாயங்களையும் தைரியமாக சந்திக்கிறார்கள்.

படிப்பறிவு,உலக அறிவு இல்லாது இருத்தல்: எல்லாப் பணக்காரர்களும் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பு முடிக்கிறார்கள். தினமும் ஏதாவது படித்துக் கொண்டிருக்கிறார்கள். பொது அறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். தெரியாத விஷயத்தை படித்து அறிந்து கொள்கிறார்கள் அல்லது நல்ல ஒரு நிபுணரைத் கூட வைத்துக் கொள்கிறார்கள். பள்ளிப் படிப்பை முடிக்காத விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பொதுவாக எல்லாப் பணக்காரர்களும் அவர்கள் படிக்கவில்லை என்றால் கூட, தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கிறார்கள்.

பொறுமை இல்லாது இருத்தல்: பணக்காரர்கள் பணம் பெருகுவதற்கு பொறுமை வேண்டும் என்பதை நன்றாக அறிந்திருக்கிறார்கள். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுப்பதில்லை. எந்த ஒரு முதலீட்டு முடிவையும் நன்றாக யோசித்து எடுத்து, பொறுமையுடன் காத்திருந்து பின்னர் அதன் பலனை ஈட்டுகிறார்கள்.

எதிர்காலத்திற்கான நிதி திட்டமிடல் இல்லாது இருத்தல்: எதிர்காலத்திற்கான நிதித் திட்டமிடல் பணக்காரர்களிடம் மிகவும் தெளிவாக உள்ளது. எதிர்கால நிதி திட்டமிடல் போகத்தான், மீதி பணத்தை அவர்கள் செலவு செய்கிறார்கள்.

கூட்டு வட்டியின் பலனை சரியாக உபயோகப்படுத்தாதிருத்தல்: பணக்காரர்கள் கூட்டு வட்டியின் பலனை உபயோகப்படுத்த சீக்கிரமாகவே முதலீடு தொடங்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

கடும் உழைப்பை நம்பாதிருப்பது: பணக்காரர் ஆவதற்கு , கடும்உழைப்பு அவசியம் என்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள். தங்கள் தொழிலில் மிகவும் விருப்பத்துடன் கடின உழைப்பை செலுத்துகிறார்கள். அதிர்ஷ்டத்தினால் பணக்காரர் ஆவது முடியாது என்பதை அறிந்துள்ளார்கள்.

இதை படிச்சா மட்டும் பணக்காரணாகிட முடியாது இது மாதிரி வாழனும்.

பதில்: வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.