பகலில் சிறுத் தூக்கம் போடுவது நல்லதா? கெட்டதா..? உண்மை காரணம்

0 633

ஒரு மனிதன் சராசரியாக இரவில் 6-8 மணி நேரம் உறங்க வேண்டும். இதைத் தவிர்த்து பகலில் 30-45 நிமிடங்கள் உறங்கலாம்.

அதற்கேற்றவாறே நம் உடலும், மூளையும் இயங்கும். இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், பல உடல் கோளாறுகள் ஏற்படும்.

விடைக்கு வருவோம், பகலில் குட்டித் தூக்கம் போடுவது நல்லது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இரவில் உடலுக்கு 6-8 மணி நேரம் ஓய்வு கொடுக்கிறோம். பகலில் ஓய்வில்லாமல் நெடு நேரம் உழைக்கிறோம். அது, நம் உடலையும், மூளையையும் மிகுதியாக சோர்வடைய செய்கிறது.

பகலில் குட்டித் தூக்கம் போடுவதால், நம் உடலில் சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற்றது போல் இருக்கும்.

அந்த குட்டித் தூக்கம், நம் உடலுக்கும், மூளைக்கும் ஓய்வு கொடுத்து நம் உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இதனால் மூளை சுறுசுறுப்புடன் செயல்படும்.

மேலும், குட்டித் தூக்கம் இதயத்திற்கு நல்லதென ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இரவில் சரியாகத் தூங்கினால், குட்டித் தூக்கத்திற்கான நேரம் நீண்டு கொண்டே செல்லாது. அதிக உணவு உட்கொண்டு வெகு நேரம் மதிய வேளையில் தூங்கினால், உடலில் பல நோய்கள் வரக் கூடும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

இன்று உலக தூக்க தினமாம்

பதில்: ஸ்டெல்லா மேரி

You might also like

Leave A Reply

Your email address will not be published.