நாம் காணும் திருவள்ளுவர் படத்தை முதலில் வரைந்தவர் யார்..? தமிழக அரசு எப்போது அங்கிகாரம் கொடுத்தது.?

0 709

ஒவ்வொரு படைப்பின்போதும் நான் புதிதாகப் பிறக்கிறேன். ஒவ்வொரு நொடியும் நான் படைப்புச் சிந்தனையிலேயே இருக்கிறேன்.

இறக்கும்போதும் நான் ஒரு சிசுவாகத்தான் இறப்பேன்’ – இப்படித் தன் படைப்புகள் குறித்து தீர்க்கமாகச் சொன்னவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா.

பள்ளிப் பாடப் புத்தகங்களில், அரசுப் பேருந்துகளில், அரசு அலுவலகங்களில், நீதிமன்றங்களில்… என பல இடங்களிலும், நாம் பார்த்துப் பழகிய மார்பு வரை நீண்ட வெண்தாடியோடு, ஒரு கையில் எழுத்தாணியையும், மறு கையில் பனை ஓலையையும் பிடித்தபடி அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தவர் இவர்தான்.

அதுவரை உருவம் இல்லாத திருவள்ளுவருக்கு 1959-ம் ஆண்டு தன் தூரிகையால் உயிர் கொடுத்தவர்.

அந்தத் திருவள்ளுவர் ஓவியம், தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிரமாண்ட விழா நடத்தி 1964-ம் ஆண்டு அப்போதைய இந்திய ஜனாதிபதி ஜாகீர் உசேனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது

கூடுதல் தகவல் – கன்னியாகுமரியில் நிறுவப்பட்டிருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவர் திரு. கணபதி ஸ்தபதி.. அதற்கு மாடலாக நின்றவர் பிரபல பரதநாட்டிய கலைஞர் திருமதி.பத்மா சுப்பிரமணியம்

மறக்காம நம்ம சேனல சப்கிரைப் பண்ணுங்க:
http://www.youtube.com/c/விவசாயத்தைகாப்போம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.