நாம் உண்ணும் காய்கறிகளில் அனைத்து சத்துகளும் உள்ளது உண்மையா..?

0 406

தமிழர்களின் உணவும் உண்ணும் முறைகளும் தற்காலத்தில் மாறிக்கொண்டே வருகிறது. அதற்காக பயன்படுத்தும் பொருள்களும் அவற்றைச் சமைக்கும் விதமும் நிறைய மாறியிருக்கின்றன.

அதிலும் இப்போது நாம் உண்ணும் பல காய்கறிகளில் அனைத்து சத்துகளும் ணகிடைக்கும் என கூற முடியாது. நமது முன்னேர்களின் உணவு முறைகள் முற்றிலுமாக மறைந்து கொண்டு போகிறது.

நம் தமிழர்களின் உணவு முறைகளில் மிக முக்கிய உணவாக பிரண்டை எண்ணும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகை வழக்கமாக இருந்தது.

இந்த பிரண்டை மூலிகை வேலி ஓரங்களில் கொடி போல் படர்ந்து வளரும் தன்மையுடையது. மேலும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. இந்த பிரண்டயை நமது முன்னேர்கள் துவையலாக சாப்பிடுவது வழக்கம்.

கொழுப்புச் சத்து உள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வதை தடுக்கிறது.

இதனால் இதய வால்வுகளும் பாதிப்படைகின்றன.ஆனால் பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும், எலும்பு பலப்படும்.மேலும் ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தவும், வாயு பிடிப்பை போக்கவும் பிரண்டை உதவுகிறது.

ஒவ்வாமைக்கும் இது சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.பிரண்டையில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன. இது இரத்த மூலம், வயிற்றுவலி ஜீரணகோளாறுகளை சரி செய்கிறது.

மேலும் ஒழுங்காக மாதவிடாய் வராத கோளாறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும் வல்லமை வாய்ந்தது இந்த பிரண்டை. இதன் வேர் கூட எலும்பு முறிவில் கட்டுப்போட உதவும்.இந்த பிரண்டை, நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவும், வாடாத பசுமையான கீரையாக சந்தைகளிலும் கிடைக்கிறது .

பிரண்டை துவையல் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:சுத்தம் செய்த பிரண்டை துண்டுகள், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு, புளி, இஞ்சி, நல்லெண்ணெய்.செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு இளஞ்சூட்டில் காய்ந்தவுடன் உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
பூண்டு, வரமிளகாய், இஞ்சி துண்டு, சிறிது புளி சேர்த்து வதக்கவும்.

புளி கரைத்த நீரில் ஊறவைத்த பிரண்டை துண்டுகளை போடவும்.
நன்றாக வதக்கியதும், ஆறவைத்து சட்னி போன்று அறைத்து தாளிக்கவும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.