“நாட்டு மாடுகளை அழிக்க” பீட்டா வின் அடுத்த கட்ட முயற்சியில் கைகோர்கிறது விகடன் குழுமம் :

0 927

பட்டியில் ஐந்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை மாடுகள் இருக்கும். அவை அனைத்தும் கிடை மாடுகள். பாலுக்கும், சாணத்திற்கும் அதன் பயன்பாடு மிகக் குறைவுதான்.

இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதே கிடை மாடுகள் வளர்ப்பின் பிரதான நோக்கம். மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் இந்தக் கிடை மாடுகளின் பட்டிகள் இருக்கும்.

ஒரே நேரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் லட்சக்கணக்கில் ஏறுவது மட்டுமல்லாமல், மலையின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, வன விலங்குகளையும் அச்சுறுத்திவருகிறது. ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் ஒரு பெரிய மணி கட்டப்பட்டிருக்கும்.

மொத்தமாக லட்சக்கணக்கான மணி ஓசை கேட்டால் எப்படி இருக்கும்?

கிடை மாடுகள் மலையில் ஏறுகிறது என்றால், அந்தப் பகுதியில் ஒரு காட்டு அணில் கூட இருக்காது. எல்லாம் ஓடிவிடும்.

இது ஒரு புறம் என்றால், மாடுகளை மேய்த்துச் செல்லும் நபர்களும் வன விலங்கு வேட்டையில் ஈடுபடுவதுதான் வேதனையானது. மலையடிவாரத்தில் வறட்சி என்றால் இந்தக் கிடை மாடுகள், வரையாடுகள் இருக்கும் மலை உச்சி வரை செல்லும்.

வரையாடுகள் போல மலை முகடுகளில் எளிமையாகச் செல்லும் திறன் கொண்டவை. இதனால், வரையாடுகளுக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை. மேலும், கிடை மேய்ப்பவர்களால் வரையாடு பெரும்பாலும் வேட்டையாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் விடக் கொடுமையானதும், வேதனையானதும் ஒன்று உள்ளது.

அது, பார்த்தீனியமும், ஆந்த்ராக்ஸ் நோயும்தான். கீழிருந்து மலையில் ஏறும் கிடைகள், மேற்குத்தொடர்ச்சிமலையில் பார்த்தீனியத்தை தனது சாணம் மூலம் பரப்புகிறது. அது மட்டுமல்லாமல், அந்த்ராக்ஸ் போன்ற கொடிய நோய்களை வன விலங்குகளுக்குப் பரப்பி இயற்கை சமநிலையைக் கெடுக்கிறது.

இவ்வளவு பிரச்னைகளை வைத்திருப்பதால்தான் பெரும்பாலான மாவட்டங்களில் இவற்றை மேற்குத்தொடர்ச்சி மலைக்குள் அனுமதிப்பது குறைந்திருக்கிறது. பல இடங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைகள், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

இருந்த போதும், பணம், அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்றும் மேற்குத்தொடர்ச்சிமலையைச் சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள்.!’’ என்று வேதனையோடு நம்மிடம் தெரிவித்தார் பெயர் வெளியிட விரும்பாத வன விலங்கு ஆர்வலர்.

“நாங்கள் கிடை மாடுகளுக்கு எதிரிகள் கிடையாது. ஆனால், அதனை முறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கிடை மாடுகளால் ஏற்படும், ஏற்பட்டிருக்கும் விளைவுகள் ஏராளம். அதிர்ச்சியான உண்மை என்னவென்றால், நம் மேற்குத்தொடச்சிமலையில் புலிகளின் எண்ணிக்கை குறைவதற்கு இந்தக் கிடை மாடுகளும் ஒரு காரணம்.

வேட்டையாடப்பட்டது முதல் காரணம் என்றால், கிடை மாடுகளை மேய்த்துச் செல்பவர்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது இரண்டாவது காரணம். மொத்தமாக ஆயிரக்கணக்கான மாடுகள் மேய்ச்சலுக்காக மேற்குத்தொடச்சிமலைக்குள் செல்லும். அப்போது ஒன்றிரண்டு மாடுகள் புலியால் வேட்டையாடப்படும்.

புலியானது, வேட்டையாடிய மாட்டை ஒரே நேரத்தில் சாப்பிடாது. இரண்டு நாள்கள் ஓரிடத்தில் பத்திரப்படுத்தும். அந்த இடத்தை மாடு மேய்ப்பவர்கள் கண்டுபிடித்து, இறந்த மாட்டில் விஷத்தை வைத்துவிடுவார்கள். புலிக்கு மட்டுமல்ல, சிறுத்தைக்கும் இதே நிலைதான்.

மலைகளில் இருக்கும் போதைப்புல்லை மாடுகள் சாப்பிட்டால் அதன் நாக்கு அறுபடும். இதனால் புற்களுக்கு தீ வைப்பார்கள். எரிந்த பின்னர் முளைக்கும் இளம் தளிர்களை மாடுகள் விரும்பிச் சாப்பிடும். இது போன்ற செயல்கள் பெரும் காட்டுத்தீக்கு வழி வகைக்கும். குரங்கணி சம்பவத்தை நாம் மறந்திருக்க மாட்டோம்!

????????இது தற்போது விகடனில் வெளிவந்துள்ள கிடைமாடுகள் பற்றிய பொய் கட்டுரை

சல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கிடைமாடு உரிமையாளர் மத்தியில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது ….

கிடைமாடுகள் ஆண்டு ஆண்டு காலமாக பாரம்பர்யமாக வளர்க்ப்பட்டுகொண்டுதான் உள்ளது இதன் நோக்கம் முற்றிலும் இயற்கை விவசாயமே அதவது மாடுகள் மொத்தத்தையும் மேய்சல் முடிந்து பயிர் செய்கின்ற விவசாய நிலத்தில் இரவு தங்க வைப்பார்கள் அது அங்கே சாணம் இடுவதால் உரமாகிவிடும்..!

கிடைமாடுகளால் வனத்தில் பல்வேறு விதமான சுகாதார சீர்கேடுகளும் நோய் தொற்றுகளும் பரவுகிறது என்பது மிகைபடுத்தபட்ட குற்றச்சாட்டு

மலைகள் எந்த மனிதனாலும் உருவாக்கப்பட்டவை அல்ல மலைக்காடுகளை உருவாக்கியன பறவைகள் அதை பராமரித்ததவை மலை மாடுகள் வேட்டை விலங்குகள் இது ஒரு உயிர்சுழற்சி இதை தீங்கு என்பதும் பிறந்த பிள்ளை தாயின் மார்பில் பால் அருந்துவதை எதிர்க்கும் செயலாகும்

கிடை மாடு மேய்சலுக்கு செல்பவர்கள் “வரைஆடு” களை வேட்டை ஆடுகிறார்களாம் …
அப்படி என்றால் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்களே எத்தனை கைதுகள் நடந்துள்ளன கூறமுடியுமா..?

அதோடு இல்லாமல் புலி வேட்டையாடிய மாடுகளில் விசத்தினை வைத்து புலி களை கொன்றார்களாம்..?
இவர்கள் தான் சொல்கிறார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் மணிகள் என்று இதை தாண்டி புலி வேட்டையாடிதாகவே கொல்வோம்

அதன் உணவில் விசம் வைக்க சென்றபோது ஒருவர் கூடவா புலியிடம் மாட்டவில்லை
பல கிடைகள் மேய்சல் நிலமின்றியும் தண்ணீர் பற்றாக்குறையாலும் ஆண்டுதோறும் அருகி வரும் நிலையில் மலைமேய்சலில் தாக்குப்பிடித்து வரும் கிடை கலை அழிக்க பொய்யான தகவல் மூலம் மறைமுகமாக பீட்டா வுடன் கைக்கோர்கிறதா விகடன் என தோன்றுவதாக தெரிகிறது…!

விகடன் கூறியது உண்மை என்றால் வனக்காவல்துறைக்கு ஏன் தெரியவில்லை..?

இந்த பொய் கட்டுரையை எழுதிய விகடன் குழுமத்திற்கு வெளிப்படையாக விவசாயத்தை காப்போம் குழு சவால் விடுகிறோம் வாதத்திற்கு தயாரா..?

போகிற போக்கில் விவசாயிகள் தான் குரங்கணியில் தீ வைத்தார்கள் என்று செய்தி வெளியிட்டாலும் வெளியிடுவான் இந்த விகடன்..!

புத்தகத்த படிச்சவன் சுற்றுச்சூழல் ஆர்வலராம் அங்கயே வாழ்றவன் சுற்றுச்சூழலை சீரழிப்பவனாம்..! நல்லா இருக்குடா உங்க திட்டம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.