நாட்டு கோழியினம் இவ்வளவு தானா..? மற்ற எல்லமே கலப்பினம்

0 620

இந்திய கோழியினங்கள்

இந்தியாவில் நான்கு தூய கோழியினங்கள் உள்ளன. அவையாவன. அசீல், சிட்டகாங், பர்சா மற்றும் கடக்நாத்
1. அசீல்:

C-Aseel1 C-Aseel2

அசீல் இனம் அதன் உடற்கட்டு, வலிமையான உடல் திறன் மற்றும் சண்டையிடும் திறன் போன்றவற்றிற்காக புகழ் பெற்றவை.
அசீல் கோழி இனத்தின் பிரபலமான வகைகளாவன, பீலா (தங்க நிறமுடைய சிவப்பு), யாகப் (கருப்பு மற்றும் சிவப்பு), நியூரி (வெள்ளை), காகர் (கருப்பு), சிட்டா (கருப்பில் வெள்ளை நிறப் பொட்டுகள்), ஜாவா (கருப்பு), சப்ஜா (வெள்ளை மற்றும் தங்க நிறம் அல்லது கருப்பு கலந்த மஞ்சள் நிறம் அல்லது வெள்ளி), டீகார் (பழுப்பு), ரேசா (இளஞ்சிவப்பு), பீ கோம்ப் எனும் கொண்டை அமைப்பு, நல்ல சிவப்பு நிறமுடைய தாடி மற்றும் காது மடல்கள், நீண்ட கழுத்து, பலமான கால்கள்.

2. சிட்டகாங்:
C-Chittagong1 C-Chittagong2

சிட்டகாங் கோழியினம் மலாய் என்றும் அறியப்படும்.
இந்த கோழியினம் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகிறது.
சிட்டகாங் இனத்தின் பிரபல வகைகளாவன, பஃப், வெள்ளை, கருப்பு, அடர்ந்த பழுப்பு, சாம்பல் நிறம்.
பீ கொண்டை, சிவப்பு காது மடல்கள், நீண்டு தொங்கும் கண் இமைகள், இறகுகள் அற்ற கொண்டைகள்.

3. கடக்நாத்:
C-Kadaknath1 C-Kadaknath2

கடக்நாத் கோழியினத்தின் தோல், அலகு, தாடி, கால் விரல்கள் மற்றும் பாதம், போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும்.
இக்கோழியினத்தின் கொண்டை, தாடி, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த கோழியினத்தின் உட்புற உறுப்புகள் அடர் கருப்பு நிறத்திலும், அதன் தசைகள், தசை நார்கள், நரம்புகள், மூளை கருப்பு நிறத்தில் இருக்கும். கருப்பு நிறம் மெலனின் நிறமி கலந்திருப்பதால் கருப்பு நிறம் இருக்கும்.

4. பர்சா:

Busra1 Busra2

பர்சா இனம் நடுத்தர உடல் வாகுடைய, இலகுவான எடையுடைய, எப்போதும் கவனுத்துடன் உஷாராக இருக்கும்.
இவற்றின் முட்டையிடும் திறன் குறைவு.
இவற்றின் தோல் நிறம் வேறுபடும்.

குறிப்பு :

அர்க்கானா அமெரிக்க கோழி இனமாகும். இக்கோழி இனங்கள் ஊதா, அல்லது பச்சை நிறத்தில் முட்டைகளை இடுகின்றன.
ஆசீல் சண்டையிடும் திறன் வாய்ந்த உள்நாட்டின கோழியினமாகும்
ஆசியன் இன கோழியினத்தில், இறகுகள் தலையினை நோக்கி சுருண்டிருக்கும்
சில்க்கி ஆசியாவைச் சேர்ந்த கோழியினமாகும். இவ்வினத்தின் அடைகாக்கும் திறன் அதிகம்.
வெள்ளை லகார்ன் கோழியினம் முட்டையிடுவதற்கு மிகவும் ஏற்ற மிகவும் பிரபலமான இனமாகும்.

கலப்பின கோழியினங்கள்
இந்த கோழியினங்கள் பல்வேறு விதமான தூய கோழினங்களை இரண்டு, மூன்று மற்றும் நான்கு முறை கலப்பினம் செய்து உருவாக்கப்படுகின்றன. இவை வணிக ரீதியாக முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றின் முட்டையிடும் மற்றும் வளரும் திறன் அதிகம். இவற்றின் கலப்பின வீரியம் அதிகம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.