நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் மார்ச் மாதம் நாம் சந்திக்க போகும் சில சம்பவங்கள்…!

1 349

பொதுவா தமிழகத்தில் மிகப்பெரிய புயல் அப்படின்னு பார்த்தோம்னா கஜாவ சொல்லலாம்..! தாக்கப்பட்டது 90% கிராமம் என்பதால் நகர வாசிகளின் பார்வையில் கஜா படவில்லை..!

கஜாவினால் தமிழக அரசிற்கு அதாவது அரசாங்க சொத்தின் இழப்பீடு 9 ஆயிரம் கோடி என்று கணக்கீடு கூறப்பட்டது ஆனால் விவசாயிகளின் இழப்பீட்டை அரசாங்கம் கணக்கீட்டு கூறவில்லை..!

அரசாங்க சொத்தின் இழப்பீட்டை விட விவசாயிகளின் இழப்பீடு அதிகமே..!

சரி இப்போ விசியத்துக்குள்ள வருவோம்…!

தென்னை

தென்னை அப்புடினாலே பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை, மற்றும் சில கிராமங்கள் இதில் பொள்ளாச்சி 35% தமிழகத்தின் தேவையை நிறைவு செய்தது பட்டுக்கோட்டை மற்றும் சில கிராமங்கள் 35% தமிழகத்தின் தேங்காய் தேவையை பூர்த்தி செய்தது ஆனால் தற்போது பொள்ளாச்சி 55% தமிழக தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்..! நிச்சயமாக முடியாது இதனால் தேங்காய் விலை அதிகரிக்கும் அதவாது தமிழகம் முழுவதும் பொள்ளாச்சி தேங்காய் செல்லும் ஆனால் பணம் அதிகம் கொடுத்து வாங்க முடிந்தவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும்…!

தேங்காய் எண்ணெய் உடனே விலை ஏற்ற மாட்டார்கள் பொட்ரோலிய எண்ணையை கொண்டு விலையை சரி செய்து கொள்வார்கள்..!

நெல் (அரிசி)

நெற்களஞ்சியம் முழுவதும் புயலால் அடிவாங்கியது இதனால் நெல்வயலுக்கு நேரடி பாதிப்புகள் குறைவு என்றாலும் மறைமுகமாக விளைச்சலை பாதித்தது சென்றவருடம் 110 மூட்டை நெல் விளைந்த அதே இடத்தில் தற்போது 75 மூட்டையே விளைந்துள்ளது..!அதே பரப்பளவு , அதே அளவு உரம் சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு கூலி அதிகம் ஆனால் விளைச்சல் குறைவு. ஆனால் நெல் கொள்முதல் விலை சென்ற ஆண்டு என்னவோ அதேதான் இந்த ஆண்டும் அதாவது மூட்டை ₹1050 இந்நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு விவசாயியும் அழிவை நோக்கியே சென்று கொண்டிருப்பார்.

ஆனால் நீங்கள் கடையில் அரிசி வாங்கும் போது அரிசி விலை கிலோவிற்கு ₹5வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது

பழ மரங்கள்

சப்போட்டா, மாதுளை, மாங்காய், முந்திரி,நெல்லி போன்ற மரங்களை மீட்க முடியாத சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் நேரடியாக விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் மறைமுகமாக மக்களும் பாதிக்கப்படுவார்கள்..! இடையில் உள்ள இடைத்தரகர்கள் மட்டுமே செழிப்பாக வாழ்வார்கள்..!

இதனால் நாங்கள் கூறவருவது என்னவென்றால் இடைத்தரகர்களை தவிர்த்து விவசாயிகளை கையில் எடுங்கள் வீழும் விவசாயம் உங்களால் மீளும்..!

பிறருக்கும் பகிருங்கள் இடைத்தரகர்களை ஒழியுங்கள்

You might also like
1 Comment
  1. Janarthanane says

    Sir,
    Please forward all updates messages to my following email id

Leave A Reply

Your email address will not be published.