நள்ளிரவிலும் பெண்கள் தனியாக எங்கு வேணுமானாலும் சென்று வரலாம். அதற்கான சுதந்திரம் இங்கு உண்டு.கொரியர்களிடம் நாம் கற்றுக் கொள்ள கூடியவை.

0 994

கொரியர்களிடம் நாம் கற்றுக் கொள்ள கூடியவை.

(இவைகளில் சிலவற்றை பலர் குறிப்பிட்டிருந்தார்கள்)

எங்கு சென்றாலும் வரிசையை கடைபிடிப்பது. உணவகங்களில் கூட, எவ்வளவு நேரமாயினும் வெளியில் பொறுத்திருந்து உணவு உண்ணுவர்.

பெரியவர்களுடன் தகுந்த மரியாதையுடன் பேசுவது. மரியாதையை அவர்களின் வயதிற்கே. அவர் செய்யும் தொழிலுக்கோ, அவர் வகிக்கும் பொறுப்பிற்கோ அல்ல.

எந்த ஒரு கடை, உணவகம் உள்ளே செல்லும்போதும் அவர்களின் மொழியில் வணக்கம் சொல்லி விடைபெரும் போது விடைபெறுகிறேன்/நன்றி என்று கூறிய பின்னரே வெளியேறுவர்.

சிறிய கடையானாலும்/ரோட்டோர கடையானாலும் அதன் உரிமையாளரை முதலாளி அல்லது -அத்தை என்று கூப்பிடுகிறவர்கள் அதிகம்.

நமக்கு உணவு வாங்கித் தந்தவர் யாராக இருப்பினும் சாப்பிடும் முன் நன்றாக சாப்பிடுகிறேன் எனவும் சாப்பிட்ட பின் நன்றாக சாப்பிட்டேன் எனவும் உணவிற்கு நன்றி கூறும் வகையில் சொல்வர்.

போக்குவரத்து விதிகளை நன்கு மதிப்பார்கள்.

எதையும் வேக வேகமாக செய்வது ஆனாலும் விதிமுறைகளை மீறாமல் செய்வது.

நேரத்தை சரியாக கடைபிடிப்பது. அதிகமாக உழைப்பது.

எந்த ஒரு அரசாங்க/தனியார் அலுவலகத்திற்கு சென்றாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. மேலும் அவர்களின் சிரித்த முகத்துடனான உபசரிப்பு.

பேருந்து, ரயில், பாதாள ரயில் இவற்றில் கர்ப்பிணி பெண்ணுக்காக ஒதுக்கப்பட்ட சீட்டில் கூட்டமாகவே இருந்தாலும் யாரும் அமர மாட்டார்கள். ஒரு சிலநேரம் வயதான மூதாட்டிகள் அமர்வர்.

தாய்மொழியின் மேல் உள்ள பற்று. பள்ளி,கல்லூரிகளிலும் தங்கள் தாய் மொழிகளிலேயே படிக்க வேண்டும் என்ற எண்ணம். ஆங்கிலப் பாடங்கள் இருந்தாலும் ஒன்று இரண்டிற்கு மேல் எடுக்க மாட்டார்கள்.

சுத்தம் – பொது இடங்களில் குப்பை போடுவது இல்லை. குப்பை போட்டாலும் அந்த இடத்திலிருந்து திரும்பும் போது அதை சுத்தம் செய்துவிட்டு தான் வருவார்கள்.

பெண்கள் எவ்விதமான ஆடைகளையும் அணியலாம். ஆடைகளின் பெயரில் தவறு செய்பவர்கள் இங்கு இல்லை.

நள்ளிரவிலும் பெண்கள் தனியாக எங்கு வேணுமானாலும் சென்று வரலாம். அதற்கான சுதந்திரம் இங்கு உண்டு.

(படம்: எங்கள் கல்லூரி சாம்சங் நூலகம் இரவு 2 மணி)

தப்பைக் கண்டால் தைரியமாக தட்டி கேட்பவர்கள் இங்கு அதிகம்.

பொதுக்கழிப்பிடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளும் மக்கள்.

பணம்/பொருளாதாரத்தின் பேரில் வேற்றுமை உண்டு ஆனால் ஜாதி(குடும்பப் பெயரின் வகை), மதத்தினால் அல்ல.

புத்தகம் படிக்கும் நல்ல பழக்கம் அனைவரிடமும் உள்ளது.

(படம்: கொரிய நண்பரிடம் பிறந்த நாள் பரிசாக பெற்ற புத்தகம்.)

சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை இங்கு மலையேறுவது, மிதிவண்டி மிதிப்பது, உடற்பயிற்சி செய்வது என தங்கள் உடலை பேணிக் காக்கிறார்கள்.

ஓவிய கண்காட்சிகள், கிளாசிக்கல் நிகழ்ச்சிகளை மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளிக்கிறார்கள்.

(படம்: ஓவியக் கண்காட்சியில் நான் எடுத்தது)

கொரிய மக்கள் அனைவருக்கும் ஒரு இசை கருவியாவது வாசிக்க தெரிந்திருக்கும்.(பள்ளியில் இது கட்டாயம்)

பொழுதுபோக்குகிற்காக பல விஷயங்களை கற்றுக்கொள்ளவர்கள். புத்தகம் படிப்பதும் அதில் ஒன்று தான். அது தவிர சித்திரமொழி, மர வேலைப்பாடுகள், பானை செய்வது, சிற்பம் செதுக்குவது, ஓவியம் வரைவது, மரச்சாமான்களை உருவாக்குவது என பலர் வகுப்புகளுக்கு சென்று முறையாக கற்றுக்கொள்கிறார்கள்.

(படம்: நண்பர்களுடன் நான் சித்திரமொழி-calligraphy வகுப்பில்.)

உதவி செய்யும் மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள்.

யாரவது பொருட்களை தவறவிட்டிருந்தால் அது ஒரு குடையாக இருந்தாலும் சரி அருகில் உள்ள காவல் நிலையம், தபால் நிலையம், ரயில்/பேருந்து நிலையம் என அரசாங்க அலுவலகங்களில் ஒப்படைத்து விடுவது.

குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவது. அதிலும் இங்கு குப்பைகளை நான்கு விதமாக பிரித்து சேகரித்து நான்கு விதமான குப்பைத் தொட்டிகளில் போடுவார்கள் (மக்கும்,மக்கா,கண்ணாடி/டின், உணவு). அதை மிகவும் கடைபிடிப்பர். மேலும் பால், கிரீம், ஷாம்பு இதுபோன்ற பேக்-களை நன்கு கழுவிய பின்னரே குப்பையில் போடுவர்.

(படம்: எங்கள் கல்லூரி ஆய்வுகூடத்தில் எடுக்கப்பட்டது. இங்கு மாணவர்களுக்கு தகுந்தது போல அமைத்துள்ளார்கள்)

இது போல மேலைநாட்டவரிடம் நாம் கற்றுக் கொள்ளக் கூடியவைகள் பல இருந்தாலும் நம்மிடம் இருந்தும் அவர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவைகளும் இருக்கத்தான் செய்கிறது.

நன்றி:)

யாழினி வேணுகோபால் (Yazhini Venugopal

You might also like

Leave A Reply

Your email address will not be published.