தேன் பானை எறும்புகளை கண்டதுண்டா..? ஆச்சரியம் ஆனால் உண்மை

0 1,390

தேன் பானை எறும்பு.

தேன் பானை எறும்பு (Honey Pot Ant) எனப்படும் இவ்வகை எறும்புகள், எறும்புகளின் காலனிக்கு தேவையான தேனை தனது உடலிலேயே சேமித்து வைக்கும் உயிருள்ள சேமிப்பு பாத்திரம் போல் செயல் படுகிறது.

தேனீக்கள் தேனை சேமித்து வைக்க தனது கூட்டை பயன்படுத்துவது போலலாமல் இவ்வெறும்பு தனது உடம்பையே சேமிப்பு கிடங்காகபயன்படுத்துகிறது.

தேவைப்படும்போது, பிற எறும்புகள் தங்களுடைய கொம்புகளால் குத்தி அத்திரவத்தை வெளிக்கொனர்கின்றன.

பிற காலணி எறும்புகள் இவற்றை கடத்திச்செல்லவும் முயற்ச்சிக்குமாம்! அதனுடைய வயிறு ஏறக்குறைய திராட்க்ஷை பழம் அளவுக்கு பெருத்திருப்பதால் அதனால் அதிகம் நடமாட இயலாது. எனவே இவற்றை வெளியில் பெறும்பாலும் பார்க்க இயலாது.

இது புற்றின் மிக ஆழமான பகுதிகளில் இருக்கும்.ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் இந்த எறும்புகளை ஒரு இனிமையான உண்வாக கருதுகின்றனர்.

வேளாண்மை செய்திகள்.
தொகுப்பு R.அன்பரசு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.