தேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி ..!

0 223
தேங்காய் இன்று உடைத்து வைத்து மிச்சம் இருந்தால் குளிர்சாதனத்தில்வைக்கிறோம். வெளியே வைத்தால் என்ன ஆகும்?…அப்படியானால் லட்சக்கணக்கான தேங்காயை உடைத்துவியாபாரிகள் எப்படி பயன் படுத்துவார்கள்?
தேங்காய் எண்ணைதயாரிப்புக்கு அடி நாதமாக விளங்கும் இந்த கொப்பரையை பதப்படுத்த இயற்கையான முறையில் தயார் செய்ய இயற்கையாக காய வைத்தாலே போதும்.நியாயமாக தொழில் செய்ய மக்களுக்கு நன்மை தர நல்ல தரமான கொப்பரை இருந்தால் தானே சுத்தமானதேங்காய் எண்ணை கிடைக்கும்?
ஆனால் பணம் செய்ய எதையும் செய்யலாம்
எப்படியும் செய்யலாம்?என்ற சிந்தனை அரசியல்வாதிகளிடம் இருந்து வியாபாரிகளுக்கும் பரவியதால் கொப்பரையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் கந்தகத்தைத் தடவி இருப்புவைக்கிறார்கள்.
தேங்காய் விலை ஏறும்காலத்தில் இவர்களுக்குவிலை அதிகமாக கிடைக்க
இந்த முறை பயன் படுகிறது.
சபரி மலை ஐயப்பன்கோவிலில் வெடி வழிபாடு நடக்கும்.கோடிக்கணக்கான தேங்காய்உடைத்து வழிபாடும் நடக்கும்.
கீழே கொண்டு போய்சேர்த்து எண்ணெய் கம்பெனிகளிடம் சேர்க்ககாலதாமதம் ஆகும்.
அதனால் வெடி வழிபாடுசெய்யும் இடத்திலேயேகந்தகம்(SULPHUR) பூசப்படுகிறது.

தேங்காய் எண்ணெயின் வரலாறு :

“சுவையைவிட, மருத்துவ பயனை வைத்தே உணவு பொருட்களை கொண்டாடும் நம் முன்னோர்கள், தேங்காய் தீயது என்றால் அப்போதே ஒதுக்கியிருப்பார்கள். ஆனால் சித்த ஆயுர்வேத மருத்துவங்களில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக தேங்காய் மற்றும் அதன் எண்ணெய்கள் அதிக பயன்பாட்டில் இருந்து வந்தன.

இந்த தேங்காயின் ராஜ்யத்தை, 1970 ம் ஆண்டுகளில் மாற்றியது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் ஆலிவ் எண்ணெய்யும் , சூரிய காந்தி எண்ணெய்யும் சந்தைபடுத்துவதில் வெற்றி கண்டு, தேங்காயின் ஆளுமையை குறைத்தன…

இக்காலத்தில் வாழும் மக்கள் தேங்காயில் அதிக கொழுப்பு சத்து இருப்பதால் கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் சாப்பிட கூடாது என்பார்கள். ஆனால் எந்த ஒரு தாவர எண்ணெய்லிருந்தும் கொலஸ்ட்ரால் நேரடியாக இரத்தத்தில் கலப்பதில்லை,நெய் மற்றும் புலால் உணவுகளால் மட்டுமே நேரடியாக இரத்தத்தில் கலக்கிறது. மேலும்

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட கூடிய ‘மோனோலோரின்’ எனும் வேதி பொருள் தேங்காயில் தான் அதிகமாக உள்ளது, இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதுடன் இரத்த கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் தவிர இந்த சக்தி இயற்கையாக கிடைக்கும் இன்னொரு இடம் தாய்ப்பால் மட்டுமே !

“தேங்காயை அதிகம் சேர்க்க கூடாது” ‘ஆகாது ‘ என்று கூறுபவர்களுக்கு நிச்சயம் இதயம் நோய் வரும் , இரத்த நாளங்களில் ஏற்படும் வெடிப்பு மற்றும் இதய இரத்த குழாய்களில் படியும் கொழுப்புகளை கரைக்க தேங்காய் எண்ணெய், தேங்காய் பாலுக்கு அதிக சக்தி உள்ளது.

இன்று அனைவருக்கும் உடல் உழைப்பு குறைவதே கொலஸ்ட்ரால் சேர்வதற்கு காரணம். உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள் சிறிது அளவு தேங்காயை சேர்த்துக் கொள்ளலாம்.

மிக சிறந்த குளிர் பானம் இளநீர் இதில் கால்சியம், பொட்டாசியம் , குளுக்கோஸ் நிரம்பியது இது T.N.S ( டெக்டோரின் வித் நார்மல் சலைன் ) கொண்ட ஓர் உணவு பொருள். ஆங்கில மருத்துவ துறையில் உடலுக்கு அவசரமாக உப்பு மற்றும் சர்க்கரை சத்துகள் தேவை என்றால் உடனடியாக கொடுக்க கூடியது இந்த சலைன். இது இளநீரில் நிறைந்துள்ளது. இது மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு சக்தியை கொடுக்க கூடியது.

குழந்தைகளுக்கு இது சத்துணவு:

தாய்ப்பாலுக்கு பின் முதலில் கொடுக்கப்படும் திட உணவுகள் மற்றும் அரிசி கஞ்சியில் 3 அல்லது 4 துளி தேங்காய் எண்ணெய் சேர்ப்பது வழக்கம் இதற்கு பெயர்தான் (ஹை கலோரி மீல் HCM ) இது குழந்தைகளின் எடையை கூட்டி சருமத்தை வழுவழுப்பாக்கும். ஒல்லியாக இருக்கும் வளர்ந்த குழந்தைகளுக்கு, தேங்காய் பால் கொடுக்கலாம்.

# பெண்கள் பலரும் கேசத்துக்கு எண்ணெய் வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் பிசுபிசுப்பில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் இதில் எந்த வித பயனும் இல்லை.
கொழுப்பை நீக்கி தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயில் எந்த விதமான எசன்ஸீம் இல்லை. இது நம் கேசத்துக்கு, உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது.

உடல் சூட்டை தணித்து, உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும் மிக முக்கிய உணவுப் பொருள் தேங்காய் என்கிறது சித்த மருத்துவம், வயிற்றுப் புண் ஆற, தேங்காய்ப் பால் போல மருந்து எதுவும் இல்லை.

மக்களின் நலனில் என்றும்
இயற்கை குடில்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.