தெருநாய்கள் என்றாலே முகம் சுழிப்போம் ஆனால் குட்டியுடன் என்றாவது தெருவில் அலையும் நாயினை கண்டுள்ளீர்களா..?

0 1,456

பலரும் பல இடத்தில் பேசக் கேட்டிருப்பீர்கள் நாய் என்றாலே ஒரு கேவலமான பிறப்பு என்று. ஆனால் மனிதனை விடவா இப்புவியில் ஒரு கேவல பிறப்பு இருந்துவிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…?

நாய்களை காணும் போதெல்லாம் ஏனோ இச்சமுகம் நாகரீகமா நடந்துகொள்வதாக நினைத்து அடித்து விரட்டுகிறது..! பாவம் அவைகள் தான் என்ன செய்யும் மனிதனுக்கு கட்டுபட்டே பழகிய ஒரு பரிதவிக்கப்பட்ட ஒரு விலங்காகி போனது..!

நாகரிக மோகம் என்று வெளிநாட்டு நாய்கள் இறக்குமதி ஆக நம் நாட்டு நாய்கள் தெருவில் குடியேர தொடங்கியது,.

தொடர்ந்து நீங்கள் செய்தி படிப்பவர் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்க கூடும் குப்பை தொட்டியில் இருந்து மாதம் ஒரு பிறந்த சிசுவை நாய் கவ்விக்கொண்டு சென்றது என்று..! அந்த இடத்தில் யாரும் இறந்து போன மனிதத்தையும், கட்டுபாடற்ற காமத்தையும் பெரிது படுத்துவதில்லை. நாய்களின் மீது அதித விமர்சனங்கள்..!

நாய்களை பற்றி யாரும் அறியாத ஒரு சுவாரஸ்யம்

*)பெண் நாய்களின் காமம் 10 நாட்கள் வரை நீடிக்கும், 60 நாட்களில் குட்டியிடும்..,

*)குட்டியிட 10 நாட்களுக்கு முன்பே எந்த இடத்தில் குட்டியிட போகிறோம் என்பதை தேடி உறுதி செய்து கொள்ளும்

*) குட்டிகளுக்கு மனிதர்களாலோ, மற்ற விலங்குகளாலே ஆபத்து வரப்போகிறது என்றால் குட்டிகளை வாயில் கவ்வி கொண்டு இடமாற்றம் செய்யும்..! இடமாற்றம் செய்யும் போது யார் கண்ணிலும் படாமல் பார்த்துகொள்ளும்

*) பிறந்த குட்டிகளுக்கு 10_முதல் 20 நாட்கள் வரை கண் தெரியாது, காது கேளாது நடக்க தெரியாது..!

மனிதர்கள் என்றுமே பல்வேறு குணங்களை உடையவர்கள். நல்ல குணங்கள், தீய குணங்கள் என்று இரு வேறு வகையாக பிரிக்கலாம். ஆனால் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் அனைத்தும் குறிப்பாக நாய் முதற்கொண்டு நல்ல குணம் மட்டுமே உள்ள பிராணி என்று கூறினால் பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். காரணம் அது கடிக்கும் என்று கூறுவார்கள்.

“எனக்கு சிறுவயதில் இருந்தே நாய்களின் மேல் ஒரு அலாதி பிரியம் உண்டு. ஒருமுறை என் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு நாயை சிறுவர்கள் அடிப்பதை பார்த்து அவர்களை தடுத்து இருக்கிறேன். நம்மை போலவே அதுவும் ஒரு ஜீவன் தானே. அதுவும் வாயில்லா ஜீவன். என்ஜினீயரிங் படித்த பின்பு ஏனோ என் வேலையில் எனக்கு நாட்டம் ஏற்படவில்லை. இதற்குள் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். என் கணவராக வந்த சந்தீப் மிஸ்ரா என்னை விட நாய்களின் மேல் அதிக அன்பு கொண்டவராக அமைந்தது எனக்கு இறைவன் கொடுத்த அருள்.

என் வேலையை விட்டுவிட்டு நாய்களுக்காகவே அவைகள் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். கூகுளில் (google)ராப்பகலா தேடியதன் விளைவு, நமது சென்னையிலேயே வுட் ஸ்டாக் நாய் பயிற்சிப் பள்ளி (Woodstock Dog Training School) இருப்பதை கண்டு பிடித்து அதன் தலைவர் ஜே.ரங்கராஜன் அவர்களிடம் கற்க ஆரம்பித்தேன். அவர் உலகளாவிய நாய் பயிற்சியாளர். பல்வேறு நாய் கண்காட்சிக்கு நீதிபதியாக இருந்தவர். எனக்கு கற்றுக் கொடுத்ததோடு நில்லாமல் நான் நாய்களை பற்றி மேலும் படிக்க உதவினார். ஒவ்வொரு படிப்பாக படித்து தேறினேன். அவரது “வுட் ஸ்டாக் நாய் பயிற்சி பள்ளி’யிலேயே வேலையும் போட்டுக் கொடுத்தார். இன்று நான் தான் நாய்கள் பற்றிய சர்வதேச சங்கத்தின் பட்டய படிப்பில் தேறியுள்ள முதல் பெண்மணி. இத்துடன் நில்லாமல் மேலும் நாய்கள் பற்றிய படிப்பை தொடர்ந்து படித்து அதில் எல்லாம் தேர்வு பெறவேண்டும் என்ற விருப்பம் என்னுள் இன்று துளிர் விட்டுள்ளது.

தெரிந்த மனிதர்களை பார்த்தால் நாய்கள் அவர்கள் மீது தாவி, தனது அன்பை காட்டும். நாய்களுக்கு தீய எண்ணங்களோ, மனிதர்களை துன்புறுத்த வேண்டும் என்றோ தெரியாது. பின் நாய்கள் ஏன் மனிதர்களை பார்த்து குரைக்கின்றன என்று நீங்கள் கேட்கலாம். புதிய மனிதர்களை பார்த்தால் யார் என்று நாம் கேட்போம் இல்லையா, அதைத்தான் நாய்களும் கேட்கின்றன. மனிதர்களை விட நாய்களுக்கு அன்பு அதிகம், நம் மீது பாசம் அதிகம் . என்னைப்பார்த்து என் நண்பர்கள் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா? நாயை கண்டால் நாம் முதலில் என்ன செய்யவேண்டும் என்பது தான். முதலில் அது இருப்பதாகவே நாம் காட்டிக் கொள்ள கூடாது. ஆங்கிலத்தில் இக்னோர் (ண்ஞ்ய்ர்ழ்ங்) என்று ஒரு வார்த்தை உண்டல்லவா, அதை நாய்கள் விஷயத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் பயப்படுவது, நம் அசைவை பார்த்தே நாய்க்கு தெரிந்து விடும். ஆகையால் நாய்கள் வருவதை கண்டுகொள்ள வேண்டாம். அல்லது அது கிட்டே வருவதற்குள் ஓடிவிட வேண்டும் என்று தயவு செய்து யாரும் எண்ணாதீர்கள். நாம் செய்யும் ஆக்ஷனில் (Action) தான் அதன் ரியாக்ஷன்னே (re – action) இருக்கும். அதை ஒரு பொருட்டாகவே எண்ணவேண்டாம். அது குரைப்பது என் வழியில் வராதீர்கள், விலகிப் போங்கள் என்று சொல்வதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். நாம் அதனிடம் அன்பு கட்டினால் அதுவும் நம்மிடம் அன்பு காட்டும். அவ்வளவுதான்.

நாய்களுக்கு எதையும் கற்றுக் கொடுக்க இரண்டு வழி முறை உண்டு. முதலில் நம்மை அது எதிர்பார்க்கும் வண்ணம் நமது செயல்கள் இருக்க வேண்டும். பல நாய்கள் நான் வருவதை எதிர்பார்க்கும். எனது கார் வந்தாலே நாய்கள் அவர்களது வீட்டின் கதவு வரை வந்து விடும். பல நாய்கள் வாசலில் உள்ள கேட்டின் முன் வந்து காத்துக் கொண்டிருக்கும். நாய்க்கு புரியும் வண்ணம் நாம் பல முறை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதனுடன் பொம்மைகள் வைத்து விளையாட வேண்டும். காரணம், நமது வீட்டில் அதுவும் ஒரு குழந்தை என்று நாம் முதலில் நினைக்க வேண்டும். பல முறை சொல்லிக் கொடுத்தால் அது கண்டிப்பாக ஒருமுறையாவது பிடித்துக் கொள்ளும். இரண்டாவது வழி முறை, அப்படி சரியாக செய்தால் நாம் உடனேயே அதற்கு பிடித்த ஏதாவது தின்பண்டம் கொடுக்க வேண்டும். நாம் சரியாக செய்தால் நமக்கு பரிசு கிடைக்கும் என்று அதற்கு தெரிந்து விட்டால் நாம் சொல்வதை அது சரியாக செய்து முடித்துவிடும். இப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டே நாம் கற்றுக் கொடுத்தால் நாய் நம் கட்டுப்பாட்டிற்கு வந்து விடும். இதற்கு பெயர் தான் ஒபீடியன்ஸ் டெஸ்ட் (Obedience test). அதாவது நம் சொல்வதை கேட்டு சரியாக செய்வது. எப்படி நாய்களை நடத்த வேண்டும் என்று நாயின் சொந்தக்காரர்களுக்கும் நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். வாரம் இரண்டு நாட்கள் வந்து கற்றுக் கொடுத்தால் சுமார் 15லிருந்து 20 தடவை வரவேண்டி இருக்கும்.

இதுவரை எந்த நாயும் என்னை கடித்ததில்லை. ஏன் பிராண்டியதே இல்லை. சுமார் 100 நாய்களுக்கு மேல் நான் பயிற்சி கொடுத்திருக்கேன். இதன் மூலம் நான் அறிந்து கொண்டது ஒன்று தான். மனிதர்களுக்கு நாய்கள் மேல் உள்ள பாசத்தை விட, நாய்களுக்கு மனிதர்கள் மேல் உள்ள பாசம் அதிகம்.

– சலன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.