தீக்காயங்களுக்கு என்ன செய்ய வேண்டும்..? தீக்காயங்கள் நான்கு வகைபடும்..!

0 755

முதல் வகை : தோல் சிவப்பாக மாறியிருக்கும், வலி இலேசாக இருக்கும்.மிகவும் சாதாரணமானது. எளிதில் ஆறிவிடும்

இரண்டாவது வகை: கொஞ்சம் அதிகபடியான தீக்காயம். தோலில் கொப்புளம்இருக்கும், வீக்கம், வலி அத்கமாக இருக்கும். உடனடியாக முதலுதவி மற்றும்மருத்துவ சிகிச்சை அவசியம்

மூன்றாவது வகை: மிகவும் அதிகபடியான தீக்காயம். தோல் வெள்ளைநிறத்திலோ, கருகி காபி அல்லது கருப்பு நிறத்திலோ இருக்கும். வலி குறைவாக இருக்கும்

நான்காவது வகை: மிக மிக ஆபத்தானது. தோல்,தசை,எலும்பு எல்லாம் தீக்காயத்துக்கு உள்ளாகி இருக்கும். பொதுவாக மின்சாரம் தாக்குவது அல்லது இடி தாக்குவதால் ஏற்படும்.

முதலுதவி

எரியும் துணியை உடலில் இருந்து அகற்றவும் முதல் மற்றும் இரண்டாவது வகை தீக்காயங்களை குளிர்ந்த நீரை கொண்டு
தீக்காயம் பட்ட இடத்தை குளிர்விக்கவும்.

இதை தொடர்ந்து சில நிமிடங்கள் செய்யவும். இப்படி செய்வதால் வலி மற்றும் வீக்கம் குறையும். காயத்தின் மேல் ஐஸ் வைக்காதீர்கள், இதனால் காயம் ஆறுவது தாமதம்ஆகலாம்.

மூன்றாவது வகை காயத்தின் மேல் சுத்தமான ஈர துணியை பரப்பி வைக்கலாம்
கழுத்து, கையில் உள்ள உலோகத்தினால் ஆன ஆபரணங்களை உடனே கழற்றி விடவும்.

இறுக்கமான உடைகளை வீக்கம் வரும் முன் கழற்றி விடவும், வீக்கம் வந்த பின் கழற்றுவது சிரமமாகிவிடும் முடிந்தால் காயம் பட்ட பகுதியை மேலே உயர்த்தவும்

காயத்தை குளிர்வித்த பிறகு சுத்தமான துணியினால் மூடி வைக்கவும்,இதனால் கிருமிகள் உள்ளே புகாமல் தடுக்கலாம்.

கொப்புளங்களை உடைக்க முயற்சி செய்யாதீர்கள்,அவ்வாறு செய்தால் கிருமிகள் எளிதில் உடலில் நுழைந்துவிடும்.

தீக்காயத்தின் மேல் எதையும் தடவ வேண்டாம்(ointment ,butter).தீக்காயங்கள் இல்லாத பகுதியை கம்பளி கொண்டு மூடி வைக்கலாம்.குழந்தையின் உடல் வெது வெதுப்பாக இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்.

வலிநிவாரண மருந்துகள் குழந்தையின் எடைக்கு ஏற்ப கொடுக்கலாம்

வருமுன் காப்பதே நல்லது

பதிவு:DR.C.MAHESH KUMAR

பகிருங்கள் யாருக்காவது பயன்படும் குணப்படுத்தும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.